'புதிய தமிழ் புலிகள்' எனும் பெயரோடு, சிறிய ஓர் ஆயுத எதிர்ப்புக் குழுவாகத் தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள்
.
.png)
'புதிய தமிழ் புலிகள்' எனும் பெயரோடு, சிறிய ஓர் ஆயுத எதிர்ப்புக் குழுவாகத் தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது -
அவ்வாறு தோற்றம் பெற்று வளர்ந்த ஏனைய தமிழ் போராட்ட அமைப்புக்களைக் கடந்து -
ஈழத் தமிழ் இனத்தின் தலைமைத் தேசிய விடுதலை இயக்கமாகவும் -
தமிழீழ தேசத்தின் தேசிய விடுதலைப் படையாகவும் - ஒரு மரபு வழிப் போர்க் கட்டமைப்பாகப் பரிணாமம் பெற்றது.
இந்த சரித்திர வளர்ச்சியின் பிதாமகர் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைப் படைத் தளகர்த்தருமான வேலுப்பிள்ளை பிரபாகரனே ஆவார்.
1989ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில் - இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுடனான போரைப் புலிகள் இயக்கம் தனது அரசியல் மற்றும் போரியல் தந்திரங்களினால் வென்று கொண்டிருந்த ஒரு புறச் சூழலுடனேயே - அவ்வாறான ஒரு வளர்ச்சிக் கட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அடைந்தது.
அதே சமகாலத்திலேயே - தனது இயக்கத்தில் இணைந்துஇ தமிழ்த் தேசத்தின் ஆட்சியுரிமைக்கான போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப் போராளிகளை ஒட்டுமொத்தமாக அழைப்பதற்கு என ஒரு பொதுவான பெயரும்இ அவர்களை ஒட்டுமொத்தமாக நினைவுகூர்ந்து வணங்குவதற்கு என ஒரு பொதுவான நாளும் நிறுவப்பட வேண்டும் என்ற சிந்தனை தலைவர் பிரபாகரனிடத்தில் உதித்தது.
அதற்கான ஒரு பெயரை உருவாக்கிஇ அதற்கான ஒரு நாளினைக் கண்டறிவதற்காகப் பொருத்தமான பல பெயர்களும் ஏற்ற பல திகதிகளும் இயக்கத்தின் உயர்மட்டத்தில் ஆராயப்பட்டதன் முடிவில் -
வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளை 'மாவீரர்கள்' என்று அழைக்கவும்,
அவர்களை நினைவு கொள்ளும் நாளை 'மாவீரர் நாள்' ஆக பிரகடனப்படுத்தவும்,
அதற்கான திகதியாகத் தனது இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் சங்கர் (..... சத்தியநாதன்) தனது மடியிலேயே உயிர் நீத்த நவம்பர் 27ஆம் திகதியை நிர்ணயிக்கவும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தீர்மானித்தார்.
இன்று - மாவீரர் நாள் என்பது ஓர் உலகளாவிய நிகழ்வு. அகிலத்தின் சரித்திரத்திலிருந்து இனி என்றுமே அகற்றப்பட முடியாத ஒரு திகதி. தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையின் சின்னம்.
தனது தலைமையை ஏற்று, தான் காட்டிய வழியில் தாமும் நடந்து, தான் கொண்ட அதே இலட்சியத்தை தாமும் வரித்துக்கொண்டு - தனக்காகவும் தமிழினத்திற்காகவும் தமது உயிர்களைக் கொடை செய்த விடுதலை வீரர்களின் வழியில் தானும் சென்று வீரச்சாவடைந்தார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். தான் வழி நடத்திய பல்லாயிரம் மாவீரர்களுள் இறுதி மாவீரனாகத் தானும் ஆகினார் அந்தத் தலைவன்.
மில்லருக்கும், திலீபனுக்கும், பின்னாளில் வீரச்சாவடைந்த அத்தனை கரும்புலிகளுக்கும் -
'நீங்கள் முன்னாலே செல்லுங்கள், நான் பின்னாலே வருவேன்' என்று கூறி வழியனுப்பிய தலைவன், அவர்கள் சென்ற வழியிலேயே சென்று வீரச்சாவடந்தார்.
அவர்களுக்காக அவர் உருவாக்கிய மாவீரர் நாளில் அவர்களுள் ஒரு மாவீரனாகத் தானும் ஆகிவிட்ட அவரையும் எங்கள் மனதில் இருத்தி நாமும் ...