சீனியர் நான்,அறிவு இருக்கா? விஜய் கட்சியில் களேபரம்-முதல் கவுன்சிலர், புஸ்ஸி ஆனந்தை விளாசிய நிர்வாகி.
நீங்க விஜய்யை அழிக்கவா வந்தீங்க? இப்படி பேசி பேசியே 2026-ல் விஜய்யை காலி செய்துவிட்டு போய்விடுவீங்க போல இருக்கே..

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சி மோதல் உச்சமடைந்து வீதிக்கு வந்துள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்கு வருகை தந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தம்மையும் தமது ஆதரவாளர்களையும் மதிக்காமல் புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டி அக்கட்சியின் முன்னாள் கவுன்சிலர் 'சுகர்னா வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்தவர் கில்லி சுகர்னா. டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த கில்லி சுகர்னா, முன்னாள் கவுன்சிலர். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
விழுப்புரம் கில்லி சுகர்னா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று நலத் திட்ட உதவிகள் வழங்க வருகை தந்தார். அப்போது அவரை வரவேற்க சுமார் 2,000 பேருடன் என் தலைமையில் காத்திருந்தோம். விழுப்புரம் எல்லை அருகே காரில் இருந்து இறங்கி, ஒரு டூவிலரில் ஏறி மாற்று வழியாக மேடைக்கு சென்றுவிட்டார் புஸ்ஸி ஆனந்த். எங்களை புஸ்ஸி ஆனந்த் புறக்கணித்துவிட்டு சென்ற காரணமே நாங்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் என்பதுதான். இதற்கு காரணமே மாவட்ட செயலாளர் மோகன்தான். அவர்தான் எங்களை மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் என கூறி புறக்கணிக்க வைத்திருக்கிறார். அப்போதும் மேடையில் இருந்த மாவட்ட செயலாளர்களில் ஒருவர் புஸ்ஸி ஆனந்திடம், 2,000 பேருடன் சுகர்னா என்பவருடன் காத்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். இதற்கு புஸ்ஸி ஆனந்த், இது மோகன் மாவட்டம் .. இதில் யாரும் தலையிட வேண்டாம்.. ஓரமா போங்க என கூறியிருக்கிறார்.
புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே உங்கள் மீது மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறோம். மாற்று கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு வந்தவர்கள் எனில் அவ்வளவு கேவலமா போச்சா?
2006-2011-ல் முதல் முதல் நகரமன்ற உறுப்பினராக விஜய் நடித்த கில்லி படத்தின் பெயரை தாங்கிக் கொண்டு போன தமிழ்நாட்டிலேயே முதல் கவுன்சிலர் நான் தான். புஸ்ஸி ஆனந்த் இப்போது எங்களை மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவங்க என்கிறார்.. இன்னும் சொல்லப் போனால் புஸ்ஸி ஆனந்தை விட நாங்க சீனியர்.. 2006-ல் புஸ்ஸி ஆனந்த் எங்க இருந்தார் என்றே தெரியாது..
இன்றைக்கு 2,000 பேருடன் உங்களை வரவேற்க காத்திருந்தோம் எனில் உங்களுக்காக எவ்வளவு பொருளாதாரம் செலவாகி இருக்கும்? எத்தனை ஆயிரம் பதாகைகள் வைத்துள்ளோம்.. ஆனா ஒரு மாவட்ட செயலாளர் பேச்சை கேட்டுக் கொண்டு, குறுக்கு வழியில் போயிருக்கீங்க.. இந்த வீடியோவை எவ்வளவு கனத்த இயத்துடன் வெளியிடுகிறேன் தெரியுமா? அத்துடன் இல்லாம, கொடி பிடிச்சவங்க.. போஸ்டர் ஒட்டுனவங்களுக்குதான் பதவி... மாற்று கட்சியில் இருந்து வருகிறவர்களுக்கு பதவி கிடையாது எனவும் சொல்லி இருக்கிறீர்கள்.. உங்களுக்கு அரசியல் அறிவு, ஞானம் இருந்தால் இந்த வார்த்தையை நீங்க சொல்லியிருக்கவே மாட்டீங்க.. அப்படின்னா மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவங்க, ஓட்டுப் போடாதீங்கன்னு சொல்லித்தான் பாருங்க.. நீங்க விஜய்யை அழிக்கவா வந்தீங்க? இப்படி பேசி பேசியே 2026-ல் விஜய்யை காலி செய்துவிட்டு போய்விடுவீங்க போல இருக்கே.. இந்த பதிவுக்காக என்னை கட்சியை விட்டு நீக்கினாலும் தவெகவின் துண்டு எங்கள் கழுத்தை விட்டு இறங்காது. இவ்வாறு கில்லி சுகர்னா தெரிவித்துள்ளார்.