இலங்கையின் கல்வி பாரிய அபாயத்தை நோக்கிச் செல்கின்றது - கண்டிக்கும் தாய்மொழி ஆசிரியர் சங்கம்!
போதைப்பொருளினால், மாணவர்களின் கல்வி எதிர்காலம் முழுமையாக அழிவுப் பாதைக்குச் செல்ல நேரிடலாம்.
இன்றைய காலத்தில் பொது நிறுவனங்கள் அமைப்புகள் சங்கங்கள் முதலியவற்றின் கருத்தியல் சுதந்திரத்தை இந்த அரசாங்கம் சாட்டுப்போக்குகள் சொல்லிக்கொண்டு ஏதோவொரு வகையில் அநீதியான முறையில் கட்டுப்படுத்துகின்றதே ஒழிய, தேசிய பாதுகாப்பில் கோட்டை விட்டுவிட்டு, அனைத்து சமூகத்தையும் பிற்போக்கான போதைப்பொருள் கலாசாரத்தை உருவாக்கி தள்ளி விட்டததை தாய்மொழி ஆசிரியர் சங்கம் அவதானித்துள்ளது.
போதைப்பொருளினால், மாணவர்களின் கல்வி எதிர் காலத்தில் முழுமையான அபாய பாதைக்குச் செல்ல நேரிடலாம். அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை எமது சங்கம் வன்மையாக எதிர்க்கின்றது.
கடந்த 7 மாதங்களில் 6064 சிறுவன்கள், 138 சிறுமிகள் என்ற வகையில் 186000 நபர்கள் போதையின் பொருட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். 4009 கிலோ ஐஸ் போதையும் கைப்பற்றப்பட்டுள்ளது. என்பது அராசாங்க தலைவரின் உத்தியோக பூர்வ புள்ளிவிபரத் தரவாகும். இது இலங்லக வரலாற்றில் என்றும் இல்லாத பலவீனமாகும். அரசாங்கம் கல்வியைப் போதைபபொருள் கொண்டு சீரழிப்பதை தாய்மொழி ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் அல்லது நிலை தொடர்ந்தால், நாடு பாரிய பொருளாதார கலாசார நெருக்கடி வலைக்குள் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நேற்று கொரோனா இன்று எரிபொருள் நாளை போதை என்ற ஒழுங்கில் இவங்கை மீளுவது மிகக்கடினமாகும். உரியவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.


