Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிங்கள அரசினதும், அரசபடைகளினதும் வக்கிர குணங்கள்.

இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.

சிங்கள அரசினதும், அரசபடைகளினதும் வக்கிர குணங்கள்.
சிங்கள அரசாலும், அரச படைகளாலும் இருவரல்ல  பலர் அழிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர்!
இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியா இன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி. இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர். இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் தமிழர்கள், பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள். சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார்கள்.
மன்னம்பெரிக்கு நீதி வழங்கப்பட்டது. அவரைக் கொன்ற படையினர் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இசைப்பிரியாவை கொன்றவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. இசைப்பிரியாவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. இலங்கை அரசு ஒருபோதும் நீதி வழங்கப்போவதும் இல்லை. ஏனெனில் நடந்தது வெறும் போர்க்குற்றம் இல்லை. அது இனப்படுகொலை.
குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் அகவை தினமாகும். அவருக்குரிய நீதி கிடைக்க குரல் கொடுப்போம். I