Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“ரணிலை அறிந்து கொள்வோம்”; இன்று தொடக்கம் சூறாவளி பிரசாரம்

.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் “ரணிலை அறிந்து கொள்வோம்” எனும் பிரசார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

9 மாகாணங்கள், 160 தேர்தல் தொகுதிகள், 341 உள்ளூராட்சி சபைகள், 4 ஆயிரத்து 984 வட்டாரங்கள், 14 ஆயிரத்து 26 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 53 ஆயிரத்து 896 கிராம வீதிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவின் பாத்திரத்தை மக்களுக்கு அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்று ரணிலின் தேர்தல் நடவடிக்கைக்கான ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதன் கீழ் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்தை எதிர்கொள்ளாத வகையில் பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் இந்தப் பிரச்சாரத்தில் இணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.