பலதும் பத்தும் : -11,03,2025 -இராணுவ புலனாய்வுப் பிரிவுஎச்சரித்தது,தேஷபந்து தென்னகோனை கைது,
ரோயல் பார்க் கொலை,

விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் பூமிக்குதிரும்புவார்களென தகவல்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்மற்றும் புட்ச் வில்மோர் எதிர்வரும் 16ஆம் திகதி பூமிக்கு திரும்புவார்களென தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 05ஆம் திகதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அமெரிக்காவின்புளோரிடா மாகாணத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர்.
அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாக 08 நாள் பயணமாக விண்வெளி சென்ற அவர்கள், அங்கு 09 மாதங்களாகசிக்கியுள்ளனர். இந்நிலையில் நாஸா அதிகாரிகள், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்குதிரும்புவதை உறுதி செய்துள்ளனர்
ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மற்றும் சர்வதேச விண்வெளி மையம் இடையே இணைப்பைஏற்படுத்தி அவர்களை பூமிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள்தெரிவிக்கின்றன
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 06 பொலிஸ்குழுக்கள்.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 06 பொலிஸ்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை பெலேன பகுதியிலுள்ளஹோட்டலொன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும்விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நீதிமன்றத்தில் பிடியானை பிறப்பிக்கப்பட்டு, ஆஜராகாமல் தவிர்ப்பவர்களின்சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதிஅமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல நேற்று தெரிவித்தார். சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தராதரம் தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது எனவும்பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
ரோயல் பார்க் கொலை.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்டஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக, ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி, அவரைதண்டிக்காததற்கான காரணங்களை முன்வைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர்நீதிமன்றம் இன்று (11) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காகமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதிசட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மைத்திரிபால சிறிசேன இன்றுவரை அந்தத் தொகையை செலுத்தவில்லை என்றுதெரிவித்தார்.
அதன்படி, மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்காகதண்டிக்கப்படாததற்கான காரணத்தை முன்வைக்குமாறு கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டது.
11 ஜப்பானிய மற்றும் 76 சீன திட்டங்கள் மீண்டும்ஆரம்பம்
இலங்கைக்கு பொருளாதார நன்மைகளை வழங்கும் பதினொரு ஜப்பானிய திட்டங்களும், 76 சீனதிட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கதெரிவித்துள்ளார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 12-போர துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் சில டி-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்துள்ளதாக அவர் வழங்கிய தகவலுக்குஅமைய விசாரணை நடத்தவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு வடக்கு குற்றப்பிரிவின்பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஓலுகல தலைமையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு எதிராக இராணுவ புலனாய்வுப் பிரிவுஎச்சரித்தது.
கொரோனா பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது பொருத்தமானநடவடிக்கை அல்ல என்பதை தான் அப்போதே கூறியதாக முன்னாள் சுகாதார இராஜாங்கஅமைச்சராக சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தவிடயத்தை கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய மறுக்கும்முடிவு, பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி இராணுவ புலனாய்வுத் தகவலின்அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஒரு அறிவியல் நிபுணராக, வைரஸ் ஒரு இறந்த உடலில் உயிர்வாழ முடியாது என்ற கருத்தைநான் கொண்டிருந்தேன். எனவே அவர்களின் மத நடைமுறையின்படி அடக்கம் செய்வது ஒருபிரச்சினையாக இருக்காது. நான் இதற்காகப் பேசினேன், ஊடக சந்திப்புகளையும் கூடவழங்கினேன்.
இருப்பினும், அடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு எதிராக இராணுவ புலனாய்வுப் பிரிவுஎச்சரித்தது. எனது பரிந்துரை தோற்கடிக்கப்பட்டது. அடக்கம் செய்வது பிற பாதகமான விளைவுகளைஏற்படுத்தக்கூடும் என்று இராணுவ புலனாய்வு எச்சரித்ததால் நாங்கள் அமைதியாக இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.