சிறப்பு விமானம் மூலம் யாழிற்கு கொண்டுவரப்பட்ட சம்பந்தனின் பூதவூடல்: கட்சியின் கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி
.
இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்!
விஷேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட சம்பந்தனின் பூதவூடல் கார் மூலம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணியளவில் கொண்டுவரப்பட்டது.
இதன்போது சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மூத்த தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கிற்கிற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று மாலை 4 மணி வரை அஞ்சலி செலுத்த முடியும் இலங்கை தமிழரசுக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.