கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மம்: வெளியாகும் பகீர் தகவல்கள்
.
அண்மையில் கொழும்பில் உயிரிழந்த சர்வதேச பாடசாலை மாணவர்கள், இருவர் தொடர்பில் பல்வேறுபட்ட, முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தகவல்களின்படி உயிரிழந்த மாணவனின் தந்தை மிகப்பெரும் பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது. உலகளாவிய ரீதியில் செயற்படும் சிகையலங்கார தொழில்துறையில் தந்தை ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு உலகின் பல நாடுகளில் அதற்கான கிளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் டெல்லியை தளமாக கொண்டு செயற்படும் குறித்த சலூன் இலங்கையிலும் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாகும். அத்துடன் அவரும், குடும்பத்தினரும் வெள்ளவத்தை பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் உயிரிழந்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் நெருக்கமான உறவு உள்ளதுடன், அதனை மாணவனின் தந்தை கடுமையாக எதிர்த்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பாகிஸ்தானை சேர்ந்த கோடிஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான வீட்டுக்கு செல்வதாக கூறி குறித்த இருவரும் அங்கு சென்றுள்ளனர்.
குறித்த கோடிஸ்வர பாகிஸ்தானிய வர்த்தகரின் மகனின் நெருங்கிய நண்பர்களாக, உயிரிழந்த மாணவனும் மாணவியும் இருந்துள்ளனர். பாக்கிஸ்தான் வர்த்தகரின் வீடு, தொடர்மாடியின் 63ஆவது மாடியில் அமைந்துள்ளது.
முன்னதாக, மாணவர்களின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை அது உறுதி செய்யப்படாத நிலையில் மர்மம் நீடித்து வருகிறது.
கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மம்: வெளியாகும் பகீர் தகவல்கள் | Colombo School Student Death Update Today Cctv
67ஆவது மாடியில் இருந்து வீழ்ந்த போதும் குறித்த இரண்டு மாணவர்களின் உடலங்களும் மூன்றாம் மாடியின் குளிரூட்டல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன, அதுவும் ஒரே இடத்தில் சடலம் மீட்கப்பட்டமை குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, மூன்றாம் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கையளித்த பொதி ஒன்றை, உயிரிழந்த மாணவன் கீழே சென்று பெற்று வந்ததாக சிசிரிவி காணொளிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனினும் குறித்த நபர் மூலம் பெறப்பட்ட பொதி குறித்து மர்மம் நீடிக்கிறது. அதேநேரம் உயிரிழந்த மாணவர்களின் உடமைகளுக்கு அருகில் சிகரெட் பெட்டியும், வெற்று தபால் உறையும் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.