Breaking News
தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்திற்கு ஆதரவு: மனோ கணேசன் தெரிவிப்பு
.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.
இதில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அண்மையில் கூடிய கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.