Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

”வடக்கில் மட்டுமல்ல கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை”

.

”வடக்கில் மட்டுமல்ல கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை”

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டிருந்த சாணக்கியன் எம்.பி ஊடகங்களுக்கு கூறுகையில்,

நான் இவ் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் என்னும் வகையில் கலந்து கொண்டிருந்தேன் 202.2025. இக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக நான் பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை அன்றைய தினமும் இவ் புதிய அரசிடம் எடுத்துரைத்திருந்தேன் . அதனடிப்படையில். மட்டக்களப்பில் உள்ள கையகப்படுத்தப்பட்ட இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் மக்களுக்கு சொந்தமான நிலம், தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம், மக்களுக்கு வழங்கப்படவேண்டிய மற்றும் மக்களுக்கு சொந்தமான வாகரை பிரதேச அரச காணிகளில் அநேகமானவை இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றது. இவை உட்பட்ட பல பொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அதற்கான குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதாக உறுதி அளித்தார். அதனுடன் கடந்தகாலத்தில் திரிபோலி ஆயுத படைப்பிரிவினால் Tripoli Platoon இனால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தேன் அதனையும் உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.