Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும்:- 28,04,025 - தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் அதிரடிக் கைது!

2 பதாகைகள் தாங்கி வரும் இ.போ.ச பஸ் வண்டிகள் - குழப்பத்தில் பயணிகள்!

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனு ரத்து

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட தரப்பினர் தற்போது மஹர நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் அதிரடிக் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிமுறையை மீறியதற்காக குறித்த வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 
இக்காலப்பகுதியில் 131 கட்சி ஆதரவாளர்களும், 31 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 
அத்தோடுஇ தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 313 முறைப்பாடுகளும், குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக 85 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 பதாகைகள் தாங்கி வரும் இ.போ.ச பஸ் வண்டிகள் - குழப்பத்தில் பயணிகள்!

அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவையில் அல்லல்படும் அரசஃதனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி டிப்போ பஸ் வண்டிகள் செயற்பட்டு வருகின்றதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
வட்டக்கச்சி மாத்திரம் செல்லும் ஓர் பேருந்து வட்டக்கச்சி பெயர் பலகையை மறைவான இடத்தில் வைத்தவாறு அக்கரைப்பற்று பெயர்ப்பலகையுடன் பயணிகளை ஏற்றுகிறது.
மிகவும் குறைந்த வேகத்தில் நகரும் இப்பேரூந்துகள் யு -9 வீதியில் வவுனியா வரை செல்லக்கூடிய பயணிகளை தனது மாய வலைக்குள் வீழ்த்தி தனது டிப்போவுக்கான வருமானத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறதா என்ற ஐயப்பாட்டினை தோற்றுவிப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இறுதியில் நேரம் பிந்தி சேவைக்கு சென்று அறிக்கையிடுவதால் தமது சொந்த விடுப்புக்கு பங்கம் ஏற்படுவதாகஇ குறித்த பேருந்தில் பயணிக்கும் அரச/தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறுமியை துஸ்பிரயோகம் -இரு பெண்கள் உட்பட மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை  காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அயல் வீட்டு பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணொருவரும் இணைந்து சிறுமியை மிரட்டி பிற ஆண்களுடன் உறவு கொள்ள வைத்து, பணம் சம்பாத்தித்து வந்துள்ளனர்.  தாம் பணம் பெற்றுக்கொண்ட போதிலும் , சிறுமிக்கு பணம் கொடுக்காது இனிப்பு பண்டங்களை மாத்திரம் வழங்கியுள்ளனர்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி , தனது உறவினர் ஒருவருக்கு இது தொடர்பில் தெரிவித்தமையை அடுத்து, வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களை  காவல் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்,  சிறுமியை  துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய ஏனைய ஆண்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.