Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

புரட்டாசியில் அசைவம் ஏன் சாப்பிடக்கூடாது? அறிவியல், ஆன்மீக காரணங்கள்!

வருடத்தில் 12 மாதங்கள் இருந்தாலும், குறிப்பாக புரட்டாசி மாதத்தில் மட்டும் அசைவம் சாப்பிடக்கூடாது என்பார்கள்.

ஆவணி மாதம் முடியும் தருவாயில் இருந்தால் போதும், பலரும் வீட்டை நன்கு சுத்தம் செய்ய தொடங்கிவிடுவார்கள். காரணம் என்னவென்று கேட்டால், அடுத்து புரட்டாசி மாதம் என்பார்கள். அதுமட்டுமா? வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்படும். 'ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிடக்கூடாது' என்பது தான் அது.

இதற்காகவே பலரும் புரட்டாசி ஆரம்பிக்கும் முந்தைய நாள், விருப்பப்பட்ட அசவை உணவுகளை உண்டு ஒரு மாத விரதத்திற்காக தயாராவார்கள். தற்போது இன்ஸ்டாகிராமிலும் புரட்டாசி மாத பரிதாபங்கள் எனும் மீம்ஸ்கள் பல லைக்குகளை வாங்கி கொண்டிருக்கிறது.

எல்லாம் சரி தான். வருடத்தில் 12 மாதங்கள் இருப்பினும், குறிப்பாக புரட்டாசி மாதத்தில் மட்டும் அசைவம் சாப்பிடக்கூடாது என்கிறார்களே, அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு என்றாவது சந்தேகம் வந்தது உண்டா? ஆன்மீக ரீதியான காரணங்கள் பல இருந்தாலும், இதற்கு பின்னால் பல அறிவியல் காரணங்களும் உள்ளது. அந்த வகையில், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என சொல்வதற்கு பின்னால் இருக்கும் ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்களை தெரிந்து கொள்வோம்.

ஆன்மீக காரணம்: 
புரட்டாசி மாதம் (ஆங்கில மாதங்களில் செப்டம்பர் மத்தியில் இருந்து அக்டோபர் மத்தியில் வரை) இந்து மதத்தில், குறிப்பாக வைணவ பக்தர்களுக்கு, மிக முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. இது மகா விஷ்ணுவிற்கு (பெருமாள்) அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்று நம்பப்படுகிறது. 
விஷ்ணுவின் அருளைப் பெறவும், தூய்மையைப் பேணவும் மக்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து, அசைவ உணவுகளைத் தவிர்க்கின்றனர். ஜோதிடத்தின்படி, புரட்டாசி மாதத்தின் அதிபதி புதன் கிரகம் ஆகும். 
புதன் பகவான் மகா விஷ்ணுவின் சொரூபமாகவும், சைவத்திற்கு உரிய கிரகமாகவும் கருதப்படுவதால், இந்த மாதத்தில் அசைவம் விலக்கப்படுகிறது. 
இந்த மாதத்தில் அசைவத்தைத் தவிர்த்து விரதம் இருப்பது, உடலையும் மனதையும் தூய்மையாக வைத்து, பக்தியில் முழுமையாக ஈடுபட உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

அறிவியல் காரணங்கள்: 
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குப் பின்னால் அறிவியல் மற்றும் சுகாதார காரணங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் அந்த காலத்தின் பருவநிலை மாற்றங்களுடன் தொடர்புடையவை.
குறைந்த செரிமான சக்தி: புரட்டாசி மாதம் என்பது மழைக்காலம் முடியும் மற்றும் தட்பவெப்பநிலை மாறத் தொடங்கும் காலமாக உள்ளது. 
இந்த பருவநிலை மாற்றத்தால், நமது உடலின் செரிமானத் திறன் (Digestive power) சற்று குறையும் என்று கருதப்படுகிறது. மழைக்காலத்தில் ஈரப்பதமான வானிலை உடலின் அமைப்பை மெதுவாக்கி, அவற்றை மந்தமாக்குகிறது என Understanding How the Change in Weather Can Impact Your Gut Health என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசைவ உணவுகள், குறிப்பாக சிவப்பு இறைச்சி, செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும் மற்றும் உடலுக்குச் சற்று கனமாக இருக்கும். செரிமான சக்தி குறைந்திருக்கும் இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது அஜீரணம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பூமியில் இருந்து வெளிப்படும் வெப்பம்: வெயில் காலத்தில் சூடாகி இருந்த பூமி, மழை பெய்யும்போது அந்த நீரை ஈர்த்து, அதன் உள்ளே இருந்த சூட்டை மெல்ல மெல்ல வெளியேற்றத் தொடங்கும். இந்த வெப்பம், வெயில் காலத்து வெப்பத்தை விட உடலுக்குக் கெடுதல் தரக்கூடியதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் அசைவ உணவுகள் சாப்பிடுவது உடல் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்து, உடல்நலக் கோளாறுகளை (உதாரணமாக, அதிக இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல், வயிறு உபாதைகள்) ஏற்படுத்தலாம்.

நோய்த்தொற்று அபாயம்: மழைக்காலம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் போது, சுற்றுப்புறத்தில் நோய்க்கிருமிகள் (Pathogens) மற்றும் நீரின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் அசைவ உணவுகளை உட்கொள்வது, அதன் மூலமாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

உயிரினங்களின் இனப்பெருக்க காலம்: பல விலங்குகள், மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இந்த காலகட்டம் இனப்பெருக்க காலமாக உள்ளது. சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த காலத்தில் அசைவம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது என்று கருதப்படுகிறது.