Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சீமான், எடப்பாடி பழனிச்சாமி ,தமிழக முதலமைச்சர் அவர்களைச்சந்தித்த தமிழ் தேசிய பேரவை!

எம்மால் கையளிக்கப்பட்ட அறிக்கையை விரைவில் மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவோம் - தமிழ் தேசிய பேரவை.

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவைக்குமிடையே சந்திப்பு!
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு இன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில்  இடம்பெற்றது.

இன்று இச்சந்திப்பில் 19-12-2025 காலை  9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது.
இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம்.  
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை  நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும்.  ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன. 

எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு !
தமிழக முன்னாள் முதலமைச்சரும்  தற்போதய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு நேற்று(18) அவரது இல்லத்தில்  இடம்பெற்றது.
இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும் 
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும்.  ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன. 

தமிழக முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தொம்!
சிறீலங்காவில் நிறைவேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரான ஏக்கியராஜ்ய அரசியலமைப்பைத் தடுத்துநிறுத்துவதற்காக இந்திய அரசினூடாக அழுத்தங்களை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினோம். 
ஈழத்தமிழ்க் கடற்றொழிலாளர்களின்  அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று கோரினோம். 
எம்மால் கையளிக்கப்பட்ட அறிக்கையை விரைவில் மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவோம் - தமிழ் தேசிய பேரவை.