Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு!

விபத்து இடம்பெற்ற உடனே அப்பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் விரைந்து செயற்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் சோகம்: அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு! 
யாழ்ப்பாணம் - குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காகப் புறப்பட்ட படகு ஒன்று இன்று காலை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பலர் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற உடனே அப்பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் விரைந்து செயற்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். புனித திருவிழாவிற்குச் சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருநகர் பகுதியில் இருந்து பாலைதீவுக்கு சென்ற ரோலர் படகு கடலில் மூழ்கி பலர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இவர்கள் தென் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.  படகோட்டியின் சடலம் மீட்பு. காணாமல் போனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.