Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும்:- 08,05,2025 - புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 133 கார்டினல்கள்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து

- முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 
வாக்குமூலம் அளிக்க இன்று (07) அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்காவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது முதலீடு, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் பிராந்திய அபிவிருத்தியை மையமாகக் கொண்ட மூன்று ஆண்டு கூட்டாண்மை குறித்து உலக வங்கித் தலைவர் அஜய் பங்காவுடன் விரிவாக கலந்துரையாடியதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

- இந்தியாவின்  தாக்குதல்களுக்கு பதிலளிக்க இராணுவத்திற்கு முறையாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அலுவலகம் அறிவித்துள்ளது.

- இந்தியா மேற்கொண்ட ஒப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, வடமேற்கு பிராந்தியத்தில் 165 உள்ளூர் விமான சேவைகளை இன்டிகோ இரத்துச் செய்துள்ளது.

- நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகாரசபை தேர்தல் பெறுபேற்றின் மூலம், நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள்.  ---பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

- புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 133 கார்டினல்கள் இன்றைய தினம் வத்திக்கான் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் மாநாட்டிற்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 
அடுத்த போப்பை தேர்வுசெய்யும் கர்த்தினால்களில் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தும் ஒருவராவார்.

- தலைக்கவசம் அணிந்திருப்பவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முடியாவிட்டால், அவர்களைக் கைது செய்யும் அதிகாரம் காவல்துறை அதிகாரிகளுக்கு இருப்பதாக இலங்கை காவல்துறை கூறுகிறது.
இது சம்பந்தமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள காவல்துறை, தலைக்கவசம் அணிந்திருக்கும் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி உண்டு என்று கூறியது.
சோதனைகளின் போது ஒத்துழைக்குமாறு தனிநபர்களைக் கேட்டுக்கொண்ட காவல்துறை, அவ்வாறு செய்யத் தவறுபவர்களைக் கைது செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

- கர்நாடக மாநிலத்தில் "த ஹிந்து" நாளிதழ் (The Hindu) ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (மே 8, 2025) இந்தியா செல்கிறார்.
இந்த விழாவில் விக்கிரமசிங்கே முக்கிய உரையாற்றுவார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பாராளுமன்றம் இன்றும் நாளையும் மீண்டும் கூடவுள்ளது.
அதன்படி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பான பிரேரணை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
பின்னர், மாலை 5 மணிக்கு, சபை ஒத்திவைப்பு நேரத்தில் எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை விவாதிக்கப்படும்.
இதே நேரத்தில், ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த சமர்ப்பித்த 6 தனிநபர் பிரேரணைகள் நாளை விவாதத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன

- ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

-இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது மார்ச் 2025 இல் 6.53 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

- கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு வேண்டப்படுகின்றனர்.
மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு, வட-மத்திய மற்றும் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்.
வடக்கு,மத்திய, ஊவா, கிழக்கு, வட-மத்திய மற்றும் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் செயல்பாட்டினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.