Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை ஏப்ரல் 11 ஆம் திகதி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல், நாட்டின் மின்சார தேவை மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது,

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை ஏப்ரல் 11 ஆம் திகதி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.பல வகையான நீர்ம ஹைட்ரோ கார்பன்களின் கலவையைக் கொண்ட(நெப்தா) களனிதிஸ்ஸ மின் நிலைய மின்னுற்பத்தி ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் எந்த மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் மின்சார விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையிலான சமநிலையை நிர்வகிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் மின்சாரத்திற்கான தேவை மற்றும் செயல்பாட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகங்கள் குறித்து விரிவான ஆய்வுக்குப் பிறகு, ஏப்ரல் விடுமுறை நாட்களில் மின்சார விநியோகத்தை நிர்வகிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தியும் நுகர்வும் எல்லா நேரங்களிலும் சமமாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய மின்சார சபை, மின் பயன்பாடு அதிகமாக இல்லாத சந்தர்ப்பங்களில், மின்சார உற்பத்தியையும் குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் கூட மின்சாரத் தேவை குறைவதால், அந்த நாட்களிலும் மின்சார விநியோகம் குறைக்கப்பட வேண்டும் என்றும் மின்சார சபை வௌியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல், நாட்டின் மின்சார தேவை மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது, மேலும் 100 கிலோவோட்டிற்கு மேல் உள்ள அனைத்து சூரிய மின்சக்தி (சோலார்) கலன்களை தற்காலிகமாக மின்சார கட்டமைப்பில் இருந்து துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மின்சார தேவை மேலும் குறைந்ததால், ஏப்ரல் 13ஆம் திகதி முதல் சூரிய மின்சக்தி (சோலார்) கலன்களின் உரிமையாளர்களுக்கு பகலில் தங்கள் சூரிய மின்சக்தி கலன்களை இயக்குவதை நிறுத்துமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது, மேலும் அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு முக்கிய படியாக இது இருப்பதாக மின்சார சபை தெரிவித்தது.