Breaking News
வலுத்துவரும் புறக்கணிப்பு! LTTE ஒரு குற்றவாளிகளின் கும்பல் அல்ல.
எங்கள் கண்ணில் மண்ணைப் போட்டுப் பேச முடியாது.

"Little Jaffna" திரைப்படத்தைக் புறக்கணிக்க வேண்டுகிறோம் – எங்கள் இனத்திற்கு எதிரான,எங்கள் வரலாற்றை அவமதிக்கும் படைப்பு.

"Little Jaffna" திரைப்படம், எங்கள் மக்களின் உண்மையான போராட்ட வரலாற்றை மாறுபட்ட முறையில் காட்டி, தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு கூலிக்கொலைக்கார கும்பலாக சித்தரித்துள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கும், கோபமூட்டும் செயலாகும்.
LTTE ஒரு குற்றவாளிகளின் கும்பல் அல்ல.
அது எங்கள் மக்களுக்கு மீது வருடக்கணக்காக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு விடுதலை இயக்கம். எத்தனை ஆயிரம் உயிர்கள் இந்த போரில் தியாகம் செய்யப்பட்டன என்பதை உலகம் மறந்துவிட்டதா?
இந்த திரைப்படம் அந்த தியாகங்களை அவமதிக்கிறது. எங்கள் வரலாற்றை சிதைக்கும் முயற்சியாக உள்ளது.
எனவே, நீதியை விரும்பும் ஒவ்வொரு தமிழரும், இந்த திரைப்படத்தை தொகுதியாகவும் உறுதியுடனும் புறக்கணிக்க வேண்டும்.
எங்கள் வரலாற்றை எங்களுக்கே எதிராக திருப்ப யாராலும் முடியாது.
எங்கள் கண்ணில் தூசி போட்டுப் பேச முடியாது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
- தமிழர் குரல்-
என்னும் கருத்தினைக் கொண்டு சமூகவலைத்தளங்களில் "Little Jaffna" திரைப்படத்திற்கு எதிரான புறக்கணிப்பு செய்திகள் வலுவடைந்து வருகின்றது.