Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான போராட்டம்!

26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, நோயாளர் சேவைகளைப் பாதிக்கும் வகையிலான பல கடுமையான தீர்மானங்களை சங்கம் மேற்கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாததைக் கண்டித்து, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (02) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தனது தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, நோயாளர் சேவைகளைப் பாதிக்கும் வகையிலான பல கடுமையான தீர்மானங்களை சங்கம் மேற்கொண்டுள்ளது.

இன்று முதல் பின்வரும் சேவைகளில் இருந்து வைத்தியர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைக்கும் துண்டுகளை (Chits) வழங்குவது நிறுத்தப்படும்.

அரச வைத்தியசாலைகளில் வசதியில்லாத பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு நோயாளர்களை அறிவுறுத்துவது தவிர்க்கப்படும்.
அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் வைத்தியர்கள் தன்னார்வப் பங்கேற்பைத் தவிப்பார்கள்.

போதிய வைத்தியர்கள் இன்றி அவசர அவசரமாகத் திறக்கப்படும் புதிய நோயாளர் விடுதிகள் மற்றும் பிரிவுகளுக்குச் செல்ல வைத்தியர்கள் மறுப்புத் தெரிவிப்பார்கள்.
நிபுணத்துவ வைத்தியர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மட்டுமே பணியாற்றுவார்கள். வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளை ஆற்றுவதிலிருந்து அவர்கள் விலகியிருப்பார்கள்.

நோயாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வசதிகள் இல்லாத சூழலில் நோயாளர்களைப் பரிசோதிப்பதிலிருந்து வைத்தியர்கள் தவிப்பார்கள்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அமைச்சின் தரப்பில் இருந்து எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனையடுத்து, கடந்த 31 ஆம் திகதி கூடிய நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.