Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி 8 வருடம் - வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்.

இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டு சனிக்கிழமை (8) வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் கோரி முல்லைத்தீவு மாவட்ட உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதியுடன் எட்டு வருடங்கள், அதாவது 2923 நாட்கள் பூர்த்தியடைகின்றன.

 ஆனால் அக்கோரிக்கை இன்னமும் ஈடேறாத நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் 8 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு, வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

 'தாய்மார்களாக, பெற்றோராக, குடும்பமாக எமது உறவுகளைக் கண்டுபிடிக்க நீதிக்கான இந்த நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறோம்' என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 அத்தோடு இன்றைய கவனயீர்ப்புப்போராட்டத்தை 'போரின் இறுதி நாட்களில் வட்டுவாகல் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்த எங்கள் உறவுகள் என்னவானார்கள்?' எனும் பிரதான கேள்வியுடன் முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 மேலும் இப்போராட்டத்தில் சகல தரப்பினரும் கலந்துகொண்டு தமக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.