பலதும் பத்தும் :- 12,04,2025 - பிரதமர் வடக்கின் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!
பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கஅனுமதி!

மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் ஹரிணி அமரசூரிய!
மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று(11) விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே இதனை தெரிவித்தார். 06 மாத காலப்பகுதியில் 03 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவது தேர்தலாக மாகாண சபை தேர்தலை நடத்ததமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். அனைவரையும் பிரதிநிதித்துவப்படும் அரசாங்கமே தற்போது உள்ளதாகவும் இம்முறை பாராளுமன்றத்தில் பெண்களின்பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக இருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்திற்கு மக்களே காரண கர்த்தாக்கள் எனவும் மக்கள் தமது அரசாங்கத்தின் மீதுகொண்டுள்ள நம்பிக்கை எதிர்பார்ப்புகளை பேணி பாதுகாத்து நேர்மையாக பொறுப்புடன் பணியாற்றுவதே தமது கடமைஎனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் விபத்தில் ஒருவர் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளதாகமருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றின் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், டிப்பர் லொறி மற்றும் மோட்டார்சைக்கிள் என்பவற்றை நீதிமன்றம் நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.
கடற்படையின் சமூகப் பணித் திட்டம்!
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம்மக்களிடம் கையளிக்கப்பட்டது. மொனராகலை மாவட்டத்தின் ம மடுல்லவில் உள்ள அல்பிட்டிய கல்லூரி வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்பஉதவியுடன் மற்றும் சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட் (Sunshine Foundation for Good) நிறுவனத்தின் நிதி உதவியுடன்நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் (10 )ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
மேலும், கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட 1091வது நீர் சுத்திகரிப்பு நிலையமானது, ஒருநாளைக்கு சுமார் 10000 லீட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த எதிர்-மின்னோட்ட நீர் சுத்திகரிப்புநிலையம், அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யும்.
புத்தாண்டின்போது கைதிகள் திறந்தவெளியில் பார்வையிடஅனுமதிக்கப்படுவார்கள்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின்போது கைதிகளை குடும்பத்தினர் அல்லது விருந்தினர்கள் திறந்தவெளியில் பார்வையிடஅனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி திசாநாயக்க அறிவித்துள்ளார். அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் திறந்தவெளியில் கைதிகளைபார்வையிட அனுமதிக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார். இந்த வருகைகளின்போது, ஒவ்வொரு கைதியும் தங்கள் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் அல்லதுசுகாதாரப் பொருட்களை பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இவை மேற்கொள்ளப்படுமென அவர் மேலும்தெரிவித்துள்ளார்.
பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கஅனுமதி!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம்ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பிள்ளையான் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வடக்கின் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!
பிரதமர் வடக்கின் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணிஎன்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இன்று (12) யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவிட்டப்புரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரிய, அதன்போது பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் காலணிகளுடன் சென்ற விடயம் தொடர்பில் கருத்துதெரிவித்து இருந்தார்.