Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் -வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்,

,

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ள வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அதற்குச் சமாந்தரமாக இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிராகப் போராடும் குழுவினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான உலகளாவிய மாநாடு கடந்த 15 - 16 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்றது. 

இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளரும், கிளிநொச்சி மாவட்டத் தலைவியுமான லீலாதேவி ஆனந்த நடராஜா, முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரி, மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி, கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 மாணவர்களில் ஒருவரின் தாயான ஜெனிஃபர் மற்றும் 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

கொழும்பிலுள்ள சுவிஸ்லாந்து தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் கலந்துகொண்ட மேற்குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினர், மாநாட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்களுடன் தொடர்புபட்ட விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடல்களில் பங்கேற்று, தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அதேவேளை இலங்கையிலிருந்து சென்ற பாதிக்கப்பட்ட தரப்பினர், இம்மாநாட்டுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் அதிகாரிகள் உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய தரப்பினருடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.

இச்சந்திப்புக்களின்போது தற்போது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என வலியுறுத்திய பாதிக்கப்பட்ட தரப்பினர், இருப்பினும் அதற்குச் சமாந்தரமாக இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இலங்கையைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகளையும், வேண்டுகோள்களையும் செவிமடுத்த ஐ.நா அதிகாரிகள், அவை தொடர்பில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தினர்.