Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மகிந்த ராஜபக்சவின் இல்லத்தின் மாதாந்த வாடகை ரூ. 4.6 மில்லியன்,

,

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.   தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தின் நிலத்தின் மதிப்பைத் தவிர்த்து மாதாந்த வாடகை ரூ. 4.6 மில்லியன் என்றார். முன்னாள் ஜனாதிபதிகள் குடியிருப்பை காலி செய்யவோ அல்லது வாடகையை தாங்களே செலுத்தவோ முடியுமென ஜனாதிபதி மேலும் கூறினார்.

"தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குடியிருப்பு அல்லது அவர்களது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு. அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க கொடுப்பனவாக மட்டுப்படுத்தும். இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்” என்று கட்டுகுருந்தவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை தவிர்ந்த அனைத்து அமைச்சு பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்களுக்காக அல்லது வேறு பொருத்தமான பயன்பாட்டிற்காக மீளப் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.