வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவை நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகிறது,
,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகிறது,
• சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த அல்லது சரணடையச் செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் பட்டியலையும் சரணடைந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகள் உட்பட்ட பட்டியலையும் வெளியிடுமாறு சிறிலங்கா அரசை வற்புறுத்தவும்,
• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டல் தொடர்பான சர்வதேச உறுப்புரை 31வது பிரிவையும் ஏற்றுக்கொள்ளுமாறு சிறிலங்கா அரசை வற்புறுத்தவும்.
• காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் துயரங்களுக்கு முடிவினை, உண்மை மற்றும் பொறுப்புக் கூறல் வடிவில் கொண்டு வரவும்
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன்இ ஐக்கிய நாடுகள் சபையின் 135வது அமர்வு ஆரம்பித்துள்ள நிலையில், கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ருத்ரகுமாரன் தனது கடிதத்தில்இ கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவர் 28) அவுஸ்விட்ஸ் (Auschwitz) இனப்படுகொலை (Halocaust)முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யூத மக்களின் விடுதலையின் 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் என்றும், 'எப்போதும் இல்லை' (Never Again) என்ற மந்திரம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் இனப்படுகொலைக்கான கருவியாக உலகின் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
ருத்ரகுமாரன் தனது கடிதத்தில், பாதிரியார் ஜோசப்(Father Joseph) தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் போரின் முடிவில் கொண்டுசெல்லப்பட்ட அவர்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபையின் பொதுச்செயலாளர் ஆக்னஸ் காலமர்ட் (Agnès Callamard) பின்வரும் கூற்றையும் குறிப்பிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் படைவீரர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் தமது முழுக் குடும்பங்களுடனும் சரணடைந்தனர்,மற்றும் முழு குடும்பமும் காணாமல் போயுள்ளனர். சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். சிறுவர்கள் எங்கே? குழந்தைகள் எங்கே என்று இலங்கையர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான்கு மாத, பத்து மாதக் குழந்தைகளின் புகைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.போரின் முடிவில் பிடிபட்ட அந்தக் சிறுவர்களுக்கும்இ குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்று சொல்லாமல் இருப்பது என்னைப் பொறுத்தவரை மன்னிக்க முடியாதது; அவர்கள் கைது செய்யப்பட்டதாக கருதமுடியாது அவர்கள் இராணுவத்திடம் சென்று சரணடைகிறோம் என்று கூறிவிட்டு காணாமல் போனவர்கள் இவர்கள்..
இலங்கைத் தீவில்இ சுயநிர்ணய உரிமைக்கு செயல் வடிவம் கொடிப்பதற்காக அரசியல் செய்த நபர்களை ஒழிப்பதற்கு மாத்திரமன்றிஇ இனப்படுகொலைக்கான கருவியாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவது பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தாய்மார்கள் பல ஆண்டுகளாக பொறுப்புக்கூறல் இல்லாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். போஸ்னிய (Bosnia) இனப்படுகொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முன் பேராசிரியர் பிலிப் சாண்ட்ஸின் (Phillipe Sands) பின்வரும் வாதத்தை ருத்ரகுமாரன் மேற்கோள் காட்டினார்: 'வலிந்து காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஏற்படும் மன வேதனையும் அதிர்ச்சியும் இனப்படுகொலைக்கான ஆதாரமாக இருக்கலாம்.'
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டல் தொடர்பான சர்வதேச ஒப்பந்ததை சிறிலங்கா அங்கீகரித்து உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு அங்கமாக ஆக்கிய அதேவேளையில்இ பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முறைப்பாடுகளை ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சர்வதேச குழுவிடம் கொண்டுவந்து நீதியைப் பெற அனுமதிக்கும் உறுப்புரை 31க்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதை அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஆட்சி சமூகத்தில் பரந்துபட்டு வேரூன்றிப் போயிருக்கும் இனவாதத்தின் காரணமாக சிறிலங்கா இராணுவத்தால் தமிழர்கள் பாதிப்படைந்த விடயங்களில்இ
ஒரு சிறிலங்க அரச குற்றவாளி கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுஇ சில மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உட்படஇ அரசாங்கங்கள் மாறிய போதிலும் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் இல்லாததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்இ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் தாய்மார்கள் பெப்ரவரி 4 ஆம் திகதியை (இலங்கையின் சுதந்திர தினம்) கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தால் வெளியிடப்பட்டு இருந்த 'சிறிலங்காவின் காணாமல் போன தமிழ்க் குழந்தைகள்' கையேடும் ஐவுதுP அமைப்பால் தயாரிக்கப்பட்டு இருந்த போரின் முடிவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சரணடைந்த தமிழர்களின் பட்டியல் ஆகியவை கடிதத்துடன் இணைக்கப்டிருந்தன.