வடகொரியா ஏவுகணை தாக்குதல்! குழப்பிய அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி!.
தென் கொரியா – அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம்

அமெரிக்கவுடன் இணைந்து தென்கொரிய இராணுவம் நேற்று ஆரம்பித்த போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா கடலுக்கு அடியில் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
தென்கொரிய அரசாங்கம் நேற்று பயிற்சியை ஆரம்பித்த சில மணிநேரங்களின் பின்னர் வடகொரியா இவ்வாறு ஏவுகளைகளை ஏவி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்த கூட்டு ராணுவ பயிற்சியை நேற்று ஆரம்பமானது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தவுள்ளன.
எனினும் இந்த ஏவுகணை தாக்குதலும் தமது இராணுவப்பயிற்றசி என வடகொரியா அறிவித்துள்ளதுடன் தென்கொரியாவின் குற்றச்சாட்டினை மறுத்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன.
வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதிக்குள் ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டு ராணுவத் தலைவர் தெரிவித்தார்.
தென் கொரியா – அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த பயிற்சி தென்கொரியாவில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்தமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியுள்ளதாகவும் இதில் 30 பேர் காயமடைந்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சியும், கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சும் குறித்த பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.