Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? படுகொலையின் கொலையாளி யார்? - சஜித் கேள்வி,

,

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நான் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். 

இத்தகைய தருணத்தில், இது தொடர்பாக அண்மைக்காலமாக அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? 

இது தொடர்பாக வெளிப்படையான விசாரணையை நடத்தி, அவர்களது குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நீதி நியாத்தை நிலைநாட்டி, கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுங்கள். என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

மேலும் கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்டும் எம்மைப் போன்ற நாட்டிற்கு நல்லதல்ல. 

இது தொடர்பில்,  ‘கட்டாயம் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என சிவப்பு முத்திரை’ பொறிக்கப்பட்ட 323 கொள்கலன்களை விடுவித்தமையை யார் பொறுப்பேற்பது? ஏன் அவ்வாறு விடுவிக்கப்பட்டன என்றும் அரசாங்கத்திடம் அவர் கேள்வி எழுப்பினார்.