Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரிசி ஆலைகளை இராணுவம் கண்காணிக்கும்! -ஜனாதிபதி

,

அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”பாரிய நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிட்டால், நெல் ஆலையில் உள்ள தமது கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும்  ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன் அரிசி தேசிய சொத்து என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நியாயமற்ற விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் மில் உரிமையாளர் எவரேனும் இதற்கு இணங்காவிட்டால், ஆலையை இராணுவத்தினர் கையகப்படுத்தி அரிசி உற்பத்தி செய்து சந்தைக்கு விடப்படும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.

தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட ஒரு சதம் அதிகமாக அரிசி விற்பனை செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும்  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.