இலங்கையில் சட்டம் இந்துக் கோவில்களுக்கு ஒரு நியாயமாகவும் புத்த விகாரைகளுக்கு இன்னொரு நியாயமாகவும் இருக்கிறது.
,

தையிட்டியில் கட்டிய புத்த விகாரையை இடிக்க முடியாது என சிங்கள அரசு கூறுகின்றது.
ஆனால் இதே சிங்கள அரசு தம்புள்ளையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று இந்து கோவிலை இடித்துள்ளது.
ஆக இலங்கையில் சட்டம் என்பது இந்துக் கோவில்களுக்கு ஒரு நியாயமாகவும் புத்த விகாரைகளுக்கு இன்னொரு நியாயமாகவும் இருக்கிறது.
இங்கு அச்சம் தரும் விடயம் என்னவெனில் தையிட்டியுடன் புத்த விகாரைகள் நின்றுவிடப்போவதில்லை.
அது வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் முளைக்கப் போகின்றது.
தமிழர் பகுதிகளில் 2000 விகாரைகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
அதேவேளை இந்திய அரசு யாழ் மருத்துவமனையில் புகுந்து கொன்றுவிட்டு அதே மருத்துவமனை வாசலில் காந்தி சிலை நிறுவி வருடந்தோறும் காந்தி ஜெயந்தி கொண்டாடுகின்றது.
இன்னொருபுறம் யாழ் நகரில் உயரமான பெரியார் சிலை நிறுவப்படும் என திராவிடம் அறிவிக்கின்றது.
இங்கு வேதனை என்னவென்றால் இந்த காந்தி மற்றும் பெரியார் சிலைகளாலும் சட்டவிரோத புத்த விகாரைகளை தடுத்த நிறுத்த முடியவில்லை.
மாறாக ஆரியமும் திராவிடமும் சிங்கள அரசுக்கே துணை புரிகின்றன.
இந்த ஆபத்துகளை தமிழ் இனம் எப்படி எதிர் கொள்ளப் போகின்றது?