தையிட்டி பௌத்த விகாரை, அகற்றப்படவேண்டிய சிங்கள ஆக்கிரமிப்பின் அடையாளம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
,

மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பியுள்ள கடிதம்,
தையிட்டி பௌத்த விகாரை, அகற்றப்படவேண்டிய சிங்கள ஆக்கிரமிப்பின் அடையாளம்: சிங்கள பௌத்தத்திற்குள் உள்வாங்கப்படுவதற்கான தமிழ்ப் பண்பாட்டு இனவழிப்பு,
2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்குப் பிறகு உள்நாட்டில் ஈழத்தமிழர்கள் ஒப்பளவில் வலுக்குன்றி விட்ட நிலையைப் பயன்படுத்திக் கொண்ட சிறிலங்க அரசு அப்பட்டமான பண்பாட்டுஇனவழிப்பில் ஈடுபட்டது – ஈடுபட்டுள்ளது. சிங்கள பௌத்த அரசியல் சமூகத்திற்குள் ஈழத்தமிழர்களையும் முஸ்லீம்களையும்வலுக்கட்டயமாக உள்வாங்க (”சிங்களமயமாக்கம்”) முயன்றது. இதனையொட்டியே குருந்தூர்மலை, குச்சவேலி இந்துக்கோயில்கள் அகற்றப்பட்டதும், தையிட்டியில் பௌத்த விகாரை சட்ட விரோதமாக கட்டப்பட்டதும், பல தமிழ் பாரம்பரியதளங்கள் அழிக்கப்பட்டதும் ஆகும்.
தமிழர் தாயகத்தில் இந்து - சைவக் கோயில்களையும், மசூதிகளையும் இடிப்பது ஒரு புதிய நிகழ்வன்று. 1970களில் சிங்களஇனவெறி அமைச்சர் சிறில் மாத்யூ தயாரித்த (பிறகு 1980இல் நூலாக நூலாக Sri Lanka: An Appeal to UNESCO to Safeguard and Preserve the Cultural Property in Sri Lanka Endangered by Racial Prejudice, Unlawful Occupation, Or Wilful Destruction வெளிவந்த )https://www.jaffnahistory.com/Cyril.pdfஆவணத்தில் 2இ000த்துக்கு மேற்பட்ட பௌத்தத் தலங்கள் தமிழர் தாயகத்தில்இருப்பதற்கு சான்று இருப்பதாகக் கூறிக் கொண்டது. கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் திரு சஜித் பிரேமதாசா தமிழர் தாயகத்தில் 1,000 பௌத்த விகாரைகள் கட்டுவேன் என தேர்தல் மேடைகளில்உறுதியளித்தார். முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான திரு ரணில் விக்கிரமசிங்கவிடமும் இதே போன்ற திட்டம்இருந்ததாக நம்பப்படுகிறது. தற்போதைய ஆட்சியாளர்கள் தையிட்டி பௌத்த விகாரையை அகற்ற மாட்டோம் என்றுமுடிவெடுத்திருப்பது, ஆள் மாறினாலும் ஈழத் தமிழர் மீதான சிங்கள மேலாதிக்கம் மாறவில்லை என்பதையே காட்டுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறிவருவது போல், சிங்கள அரசியல் சமூகத்தில் பரவலாகவேரூன்றியிருக்கும் பேரினவாதத்தால் தமிழர்கள் கண்ணியத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ இடமே இல்லை.
1949ஆம் ஆண்டின் நான்காம் ஜெனிவா ஒப்பந்தம், போர் நடவடிக்கைகளுக்குக் கட்டாயம் தேவை என்றால் மட்டுமேபொதுமக்கள் நிலங்களை இராணுவப் படை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்கிறது. போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியபின்னரும் தமிழர் தாய்நிலத்தை சிங்களப் படை ஆக்கிரமித்து நிற்பது தெளிவான சர்வதேசச் சட்ட மீறல் ஆகும். விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்காவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தையின்போது சிறிலங்க ஆயு தப் படைகள் பொதுமக்கள்நிலங்களில் இருந்து விலகிக் கொள்ள மறுத்தமை பேச்சுவார்த்தை முறிவுற்றதற்கு ஒரு முகன்மைக் காரணம் ஆகும். தமிழ்ப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதற்கும், 2003ஆம் ஆண்டு பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் சுவர் கட்டியதற்கும்ஒப்புமை காணலாம். இது குறித்து சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) ”சுவர் கட்டியதும் அதுதொடர்பான ஆட்சிமுறையும் மக்கள்தொகை இனப் பரம்பலில் (demographic changes) மாற்றம் ஏற்படச் செய்வதன் மூலம்நான்காம் ஜெனிவா ஒப்பந்தத்தின் உறுப்பு 49இ பந்தி 6ஐ மீறுகின்றன…” என்று தீர்ப்புரைத்தது.
பௌத்த விகாரையைச் சுற்றிப் பல்வேறு வசதிகளைக் கட்டுமானம் செய்யவும் இராணுவம் திட்டமிட்டுள்ளது. (பௌத்தவிகாரையைச் சுற்றி ஆயுதப் படைகளை நிறுத்தி வைப்பது பற்றி பகவான் புத்தர் என்ன நினைப்பாரோ!) சிங்களக் குடிமக்கள்யாரும் வசிக்காத ஓரிடத்தில் பௌத்த விகாரை கட்டுவது தமிழர் தாயகத்தில் சிங்கள அரசியல் சமூகம் செய்யும் தெளிவானவன்குடியேற்றச் செயல் ஆகும். (Colonization) ஆகவே பௌத்த விகாரையை அகற்றுவது வன்குடியேற்ற நீக்கம் (de-colonization) ஆகும். (சமயத் தலங்களை அகற்றுவதற்கு சிறிலங்காவில் முன்னுதாரணம் உள்ளது. எடுத்துக்காட்டாக2013ஆம் ஆண்டு தம்புள்ளாவில் இந்துக் கோயில் இடிக்கப்பட்டது. மேலும் கீரிமலை, காங்கேசந்துறை, சம்பில் ஆகியஇடங்களில் இருந்த இந்துக்கோயில்களும், சைவ புனிதத் தலங்களும் இராணுவத்தால் அழிக்கப்பட்டன)
அமெரிக்க ஐக்கிய நாட்டு ராஜாங்கத் திணைக்களத்கினால் 2016ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் “… வடக்குகிழக்கு மகாணங்களின் சில பகுதிகளில்” பௌத்தரல்லாத உள்ளூர் மக்களின் மறுப்பையும், எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல்”பௌத்தக் குழுக்கள் அல்லது இராணுவத்தினர் பௌத்த விகாரைகள் கட்டிய செயல் பௌத்த சிங்கள சமய மற்றும்பண்பாட்டு ஏகாதிபத்தியத்தின் சர்ச்சைக்குரிய அடையாளங்களாகிப் போயின.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. .[https://www.state.gov/reports/2016-report-on-international-religious-freedom/sri-lanka/]
2023ஆம் ஆண்டின் மனிதவுரிமைக் கண்காணிப்பக (Human Rights Watch) அறிக்கை… எப்படி அரசு ஆதரவோடுதமிழர்களையும் பிற சிறுபான்மைச் சமுதாயங்களையும் குறி வைத்து நிலப் பறிப்புகள் நடைபெறுகின்றன, எப்படிப் பலநேரம்எதிர்ப்புக்குரல்களை வாயடைக்கச் செய்யக் கொடிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதுபற்றிப் பேசுகிறது.,https://www.hrw.org/report/2023/09/18/if-we-raise-our-voice-they-arrest-us/sri-lankas-proposed-truth-and-reconciliation].
தையிட்டி பௌத்த விகாரைக் கட்டுமானம் தொடங்கிய முதல் நாள் தொட்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதற்குஎதிர்ப்புத் தெரிவித்ததுடன், தமிழ் நிலச் சொந்தக்காரர்களுடன் சேர்ந்து போராட்டங்களும் செய்தது. தமிழர்களின் சொந்தநிலம் சட்ட விரோ தமாக பறிக்கப்பட்டிருந்தது. சிறிலங்க அரசு விகாரையை நிரந்தரமாக்கிக் கொள்ளும் பொருட்டு நிலத்தில்“நடந்து முடிந்து போன ஒன்று” என்ற நிலையைத் தோற்றுவிக்க முயல்கிறது. இந்த வஞ்சகச் செயல் தமிழ்த் தேசத்தைபழிப்பது மட்டுமல்ல, சர்வதேசச் சட்டத்தின்பால் வேண்டுமென்றே அவமதிப்புக் காட்டுவதும் ஆகும். சிங்களப் பகுதிகளில்உள்ள இந்துக் கோயில்களையும் மற்றும் முஸ்லிம் மசூதிகளையும் தமிழ்ப்பகுதிகளில் உள்ள சிங்களக் கோயில்களையும்சமப்படுத்த முடியாது. முன்னவை சிங்கள ஆட்சியின் கீழ் உள்ளன; ஆகவே அவற்றை ஆக்கிரமிப்பு அல்லதுவன்குடியேற்றத்தின் அடையாளங்களாகக் கருத முடியாது – தமிழ்ப் பகுதிகளில் உள்ள பௌத்த விகாரைகளின் நிலைஎதிர்மாறானது.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றி.
பிரதமர், விசுவநாதன் ருத்ரகுமாரன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பியுள்ள கடிதம்,