Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தென் ஆப்பிரிக்கா தங்க சுரங்க விபத்தில் 87 தொழிலாளர்கள் மரணம்

.

தென்ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கங்கள் அதிக அளவில் உள்ளன. தங்கம் வெட்டி எடுத்தபின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும். அவ்வாறு கைவிடப்பட்ட சுரங்கங்கள் ஏராளமானவை உள்ளன.

அதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிகவும் ஆழமான பஃப்பெல்போன்டீன் தங்க சுரங்கமும் என்று. இந்த சுரங்கம் சுமார் 2.5 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது. இந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுரங்க தொழிலாளர்கள் தங்கம் இருக்கிறதா? என தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். இவர்களில் பலர் தாங்களாகவே வெளியே ஏறினர். பலர் சுரங்கத்திலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

சுரங்கத்தில் தங்கியிருந்தவர்களை குற்றவாளி என பொலிசார் அறிவித்தனர். இதனால் வெளியேறிவர்களை கைது செய்து வந்தனர். இதனால் கைதுக்கு பயந்து உள்ளேயே இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் வெளியேறுவதற்காக சுரங்கத்திற்குள் உணவு பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் பொலிசார் இன்று சுரங்கத்திற்குள் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இறந்து போன 78 பேர் உடல்களை சுரங்கத்தில் இருந்து மீட்டனர். ஏற்கனவே 9 உடல்கள் மீட்கப்பட்டிருந்தது. இதனால் 87 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

போலீசார் தரப்பில் மீட்புப்பணி முழுமையாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது. சுரங்கத்தில் யாரும் இல்லை என நம்பப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா தங்க சுரங்க விபத்தில் 87 தொழிலாளர்கள் மரணம் | South Africa Gold Mine Accident 87 Workers Dead