Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தஞ்சை மீனவர்கள் வலையில் சிக்கிய கடற்பசு! மீண்டும் கடலுக்குள் அனுப்பிய மீனவர்கள்!

,

தஞ்சாவூர் மாவட்டம் கீழத்தோட்டம் பகுதியில் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் கடற்பசு ஒன்று சிக்கிய நிலையில் அவற்றை மீனவர்கள் மீட்டு மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் பகுதியில் நேற்று இரவு ( ஜன.26) மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வலையில் கடற்பசு ஒன்று சிக்கியுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் கடல் பசு குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின் கவியரசன் மற்றும் மற்ற மீனவர்கள் அந்த கடற்பசுவை மீன் வலையிலிருந்து மீட்டு அதை மீண்டும் கடலுக்குள் பத்திரமாக விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை வன சரக அலுவலர் சந்திரசேகர் மற்றும் வனத்துறையினர் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு கீழத்தோட்டம் கடற்கரை பகுதிக்கு சென்று கடல் பசுவை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.  

இது குறித்து பேசிய மீனவர் கவியரசன், “ தமிழக அரசு மீனவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கடற்பசு வலையில் சிக்கினால், பத்திரமாக கடலுக்குள் விட கற்று கொடுத்துள்ளனர். மேலும் வலையில் சிக்கும் கடற்பசுவை மீனவர்கள் கடலுக்குள் விட்டால் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்” என அறிவித்துள்ளனர்.  அதனால், அந்த கடற்பசுவை பத்திரமாக மீன் வலையிலிருந்து எடுத்து, மீட்டு மீண்டும் கடலில் பத்திரமாக விட்டுவிட்டோம். இதையடுத்து கடற்கரைக்கு வனத்துறையினர் இங்கு வந்தனர். நாங்கள் கடலுக்குள் கடற்பசுவை விட்டதற்கு பாராட்டுகள் தெரிவித்தனர். மேலும், ஊக்கத் தொகை தருவதாகவும் கூறினார்கள்” என்றார்.