Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பாலஸ்தீனியர்கள் விடுதலையை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு

.

இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 600 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் உட்பட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பணயக்கைதி விடுதலை : பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகள்இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்போவதில்லை என பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட உடன்படிக்கையின் படி ஹமாஸ் அமைப்பு இன்னமும் நான்கு கைதிகளை மாத்திரம் விடுதலை செய்யவேண்டும்.பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவேளை உயிரிழந்த நால்வரின் உடல்களை ஒப்படைக்கவேண்டும்.

ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது உட்பட பல உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.