திட்டமிட்டு தமிழர்களை குறிவைக்கும் போதைக் கும்பல் ! யாழில். பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை – இளைஞன் கைது !!.
உண்மையிலேயே போதைப்பொருள் விற்பனையாளர்கள், ஊக்குவிப்பாளர்கள் போலீசாரே.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த வீட்டில் இருந்து, கஞ்சா கலந்த 4 kg 250g மாவா பாக்கு, பீடித்தூள் 12 kg 500g, மற்றும் வாசனை திரவியம் 24 ரின்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
அதனை அடுத்து மாவா பாக்கினை தயாரித்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் இளைஞனை கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிசார் கடமை செய்வதில்லை, தம் தொழிலை விஸ்தரிக்கிறார்கள். ஒவ்வொரு போலீசையும் சோதனையிட்டால் புரியும். விநியோகம் அல்லது யாரையாவது குற்றவாளியாக்குவதற்கு பயன்படுத்துகிறார்கள், போலீசாரே இதன் சூத்திரதாரிகள், அதிலும் தம்மை கேள்வி கேட்க்கும், தமக்கு எதிராக செயற்படும், தமக்கு வேண்டியவர்களுக்கு ஆகாதவர்களை பழிவாங்கவும், போலீசார் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் புலிகளோடு தொடர்பு, ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று குற்றம் சுமத்தி பழிவாங்கினர். இப்போ, போதைப்பொருள். உண்மையிலேயே போதைப்பொருள் விற்பனையாளர்கள், ஊக்குவிப்பாளர்கள் போலீசாரே. இவர்களாலேயே வடக்கிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது போதைப்பொருள், வாள்வெட்டு. தங்களுடைய விநியோகஸ்தர் பிடிபட்டால்; மனநோயாளி, மதுவுக்கு, போதைக்கு அடிமையானவர் என்று காரணாம் வேறு சொல்வார்கள். போலீசாரே முதல் கிரிமினல் குற்றவாளிகள். அண்மையில் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் அதற்கு சான்று!