Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

வடக்கில் முதன்முறையாக இடம்பெறும் பூப்பந்தாட்ட பயிற்சியாளர்களிற்கான பயிற்சி முகாம்..!

,

வடமாகாணத்தில் முதன்முறையாக பூப்பந்தாடட் பயிற்சியாளர் தரம் ஒன்றிற்காக நான்கு நாட்கள் பயிற்சி முகாம் இன்றையதினம்(12)  வவுனியா, ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த பயிற்சி முகாமானது  வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக,   இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கை பூப்பந்தாட்ட  பயிற்சி மேம்பாட்டு சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது  இலங்கை பூப்பந்தாட்ட பயிற்சி மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் புத்திக்க டி செல்வா, வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் இணைப்பாளர் தே.கமலன், ஓமந்தை விளையாட்டு மைதான இணைப்பாளர் தனுராஜ், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்புக்கு வெளியே முதன்முறையாக இடம்பெறும் இப்பயிற்சி முகாமில் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்மை குறிப்பிடத்தக்கது.