பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்
,

புதிய மசோதா நிறைவேற்றப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் என சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா அரசாங்கத்தின் இலட்சியமோ அல்லது கொள்கையோ அல்ல என்றும் சபைத் தலைவர் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தையும் பொதுமக்கள் முற்றாக நிராகரிக்கின்றமை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடாத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது, மாற்றுக்கொள்கை நிலையத்தின் ஆராய்ச்சிப் பிரிவான சோசியல் இண்டிகேட்டர் நடாத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அறிந்துள்ளதாக 38,5 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர், இவர்களில் 72.6 வீதமானவர்கள் தாங்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள அதே வேளை நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் குறித்தும் 28.4 வீதமானவர்கள் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர், மேலும் 71,1 வீதமானவர்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்,
பயங்கரவாத தடைச் சட்டம் மீதான சிங்கள மக்களின் கருத்துக்கணிப்பு இவ்வாறு இருக்கின்ற போதிலும் இனத்துவசத்தை தூண்டி அவ்வப்போது அதை மிகவும் சுடர் விட்டு எரிய வைப்பது அரசியல்வாதிகளின் கைவந்த கலையாக இருந்து வந்துள்ளது, எனினும் புதிய அரசாங்கத்தின் மீது சில தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் புதிய மசோதா நிறைவேற்றப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்,,, என்கின்ற வார்த்தையை பார்க்கும் பொழுது "இலவு காத்த கிளிகள்" போல் ஆகி விடுமோ என்கின்ற எண்ணமும் தோன்றுகின்றது,