தமிழ்,சிங்கள புத்தாண்டிற்காக கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்காக சிறப்பு பயணிகள் போக்குவரத்து சேவை!
.

தமிழ்,சிங்கள புத்தாண்டிற்காக தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்காக சிறப்பு பயணிகள் போக்குவரத்து சேவைகளும் ரயில் சேவைகளும் இன்று (12) இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய போக்குவரத்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பிரதான போக்குவரத்து நிலையம், அதிவேக நெடுஞ்சாலையில் மாகும்புர, கடவத்தையில் உள்ள பிரதான போக்குவரத்து நிலையங்களில் இருந்தும் சிறப்பு போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன.
இதற்கமைய பதுளை, பெலியத்த, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு 40 ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 9 முதல் 21 வரை ரயில்வே திணைக்களம் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து கூட்டுப் போக்குவரத்துத் விசேட திட்டம் ஒன்றை தயாரித்துள்ளன.
மேற்கூறிய காலகட்டத்தில், 24 மணி நேரமும் பயணிகள் விபரங்களை அறிந்து கொள்ள 1955 என்ற ஹொட்லைன் எண் மற்றும் 071 2595555 என்ற வட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களைப் பெற, பஸ்கள் தொடர்பில் 1958 என்ற எண்ணையும், ரயில் விசாரணைகளுக்கு 1971 என்ற எண்ணையும் அழைக்கலாம்.