Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

நிகழ்வில் பங்குபற்றிய வீரர் வீராங்கனைகளின் அனுபவப்பகிர்வும் இடம்பெற்றது.

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் நேற்று (11.04.2025) மு.ப 10.00 மணிக்கு கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது .

இவ் கெளரவிப்பு நிகழ்வில் தலைமையுரையாற்றிய  மேலதிக  அரசாங்க அதிபர் (காணி) அவர்கள் தமது உரையில், மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியானது 
03.04.2025 ஆம் திகதி கொழும்பு ஹோகாஹம  விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது எனவும், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 450 போட்டியாளர்கள் பங்குபற்றியதாகவும், எமது மாவட்டத்திலிருந்து 16 போட்டியாளர்கள் பங்குபற்றி  02 தங்கப் பதக்கங்களையும் 03 வெற்றி சான்றிதழ்களையும் யாழ்ப்பாண மாவட்டம் பெற்றுள்ளது மகிழ்வான பெருமையான விடயம் எனவும். அந்தவகையில் வெற்றிபெற்ற சாதனையாளர்களை கெளரவிப்பதன் மூலம் எம்மை மகிழ்விப்பதாகவே அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், போட்டியில் வெற்றி தோல்வி என்பதற்குப் அப்பால் பங்குபற்றுவதே மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டதுடன், அரசாங்க அதிபர் அவர்களுடன் இணைந்தவகையில் நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு துணைநிற்போம் எனக் குறிப்பிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். 

இந் நிகழ்வில் வரவேற்புரையானது உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன், வாழ்த்துரைகளை பிரதம கணக்காளர் திரு. செ. கிருபாகரன் அவர்களாலும், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் அவர்களாலும்  நிகழ்த்தப்பட்டது. 

இந்நிகழ்வில் தேசியப் போட்டியில்  குண்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற திரு.தர்மலிங்கம் சிறிகாந் அவர்களும் தட்டெறிதலில் தங்கப் பதக்கம் பெற்ற செல்வி பாலசந்திரன் கிருசிகா அவர்களும் பொன்னாடை போர்த்தியும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் கெளரவிக்கப்பட்டதுடன், ஏனைய வெற்றிச் சான்றிதழ் பெற்ற 03 போட்டியாளர்களும் மற்றும் போட்டியில் பங்குபற்றிய வீரர் வீராங்கனைகளும் கெளரவிக்கப்பட்டார்கள். 
நிகழ்வில் பங்குபற்றிய வீரர் வீராங்கனைகளின் அனுபவப்பகிர்வும் இடம்பெற்றது.