பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்!
20 நாட்களாக தலைமறைவாக இருந்த தேஷபந்து தென்னகோன் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் நேற்று (19) சரணடைந்தார்.

உயர்நீதிமன்றினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தேஷபந்து தென்னகோன் முன்வைத்த பிணை கோரிக்கை தொடர்பான தீர்மானம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
காணும் இடத்தில் கைதுசெய்யுமாறு உத்தரவு வழங்கப்பட்டிருந்த தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (19) சரணடைந்தார்
இதன்போது அவரை இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் அவர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம ஹோட்டலுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த தேஷபந்து தென்னகோன் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் நேற்று (19) சரணடைந்தார்.
உயர்நீதிமன்றினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.