Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முதலீடுகளை ஈர்க்க நோர்வேயின் நேரடி ஒத்துழைப்பு!

நோர்வேயின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் யாழ்ப்பாணம் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவது குறித்தும் ஆராயப்பட்டது.


தற்போது வீதிகள், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் மேம்படுத்தி வந்தாலும், அம்மக்களின் கைகளில் நேரடி வருமானத்தை வழங்கக்கூடிய பாரிய முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். நோர்வேயின் முன்னணி நிறுவனங்கள் இலங்கைக்கு வருகை தந்து, நேரடி முதலீடுகள் (FDI), பொது-தனியார் பங்குடைமை (PPP) அல்லது கூட்டு முயற்சிகள் (Joint Ventures) ஊடாக வடக்கின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். 

வரலாற்றில் முதல் முறையாக வடபகுதி மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு (NPP) பாரிய ஆணையை வழங்கி, ஆழமான நம்பிக்கை வைத்துள்ளமையை அமைச்சர் சுட்டிக்காட்டினார். "தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான இடைவெளி தற்போது குறைவடைந்துள்ளது. இது கடந்த காலத்தில் நீங்கள் பார்த்த பழைய நாடு அல்ல; இதுவொரு புதிய நாடு, புதிய அரசாங்கம். எனவே, நோர்வேயில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் (Diaspora) கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து, மீண்டும் தமது தாய்நாட்டிற்கு வந்து முதலீடு செய்யவும், வாழவும் முன்வர வேண்டும். இந்த நேர்மறையான செய்தியை நோர்வே தூதரகம் ஊடாக புலம்பெயர் சமூகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும்" என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த நோர்வே பிரதிநிதிகள், வடக்கின் நிலைமைகளைத் தாம் நன்கு உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர். அத்துடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஊடாக வடக்கில் முன்னெடுக்கப்படும் கடல் பாசி வளர்ப்பு (Seaweed), திலாப்பியா மீன் வளர்ப்பு (கார்ர்கில் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் திட்டம்) மற்றும் நோராட் (NORAD) ஊடாக முன்னெடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை தொடர்பில் புலம்பெயர் சமூகம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும், அமைச்சரின் இந்த நேர்மறையான செய்தியை நிச்சயமாக அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதாகவும் தூதரக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

மேலும், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. நோர்வேயின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வலை உற்பத்தி நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், நாரா (NARA) மற்றும் நோராட் (NORAD) நிறுவனங்களுக்கு இடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைத் தொடரவும் இணக்கம் காணப்பட்டது. அண்மையில் இலங்கையில் கடல் வள ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்ட நோர்வேயின் 'Dr. Fridtjof Nansen' கப்பலின் பணிகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கும் நோர்வே அதிகாரிகள் விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.