Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

“மக்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் மக்களிடமே ஒப்படைப்போம்”

மல்வானை பகுதியில் அமைந்துள்ள, உரிமையாளர் எவருமற்ற சொத்து என அடையாளம் காணப்பட்டுள்ள காணி மற்றும் வீட்டினை பல்கலைக்கழகங்களின் கல்வித் தேவைகளுக்காகவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் கையளிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தது. குறித்த வீட்டைச் சுற்றிவளைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியைச் சுட்டிக்காட்டினர்.

“மக்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் மக்களிடமே ஒப்படைப்போம்” என்ற வாக்குறுதிக்கு இணங்க, இடவசதி குறைவாக உள்ள பல்கலைக்கழகங்களின் பயன்பாட்டிற்கு இந்தச் சொத்தை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கும், தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து: இச்சொத்து நீதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர், இதனை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ‘அரகலய’ போராட்டத்தின் போது ஒரு குழுவினரால் இந்த வீடு தீ வைக்கப்பட்டு, ஒரு பகுதி சேதமடைந்திருந்தது. ஆரம்பத்தில் இங்கு சர்வதேச நீதிபதிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அந்தத் திட்டம் நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் காணி பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்தச் சூழலிலேயே, வீணாகக் கிடக்கும் இந்தச் சொத்தை மாணவர்களின் கல்வி மற்றும் பொது நலச் சேவைகளுக்காகப் பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.