Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும்:- 01,05,2025 - மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம்

மூதூர் கிராம மக்கள் முன்னெடுத்த மேதின நிகழ்வு..!

மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம்

மே தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம்இன்று (30) விசேட அறிவிப்பை வெளியிட்டது. 

மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம்!

மே தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம்இன்று (30) விசேட அறிவிப்பை வெளியிட்டது.  அறிவிப்பின் படி, மே தினக் கூட்டங்கள் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ளசில்லறை மதுபான விற்பனை நிலையங்கள், நாளை மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல்களுக்கு இதுபொருந்தாது என கலால் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் ஒரு பகுதி காணிவிடுவிப்பு! 

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(01.05.25)  உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்   யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணிஅனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் நிலங்களும், திக்கம் பகுதியில் 5 ஏக்கர் காணிநிலமுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஸ்ரீமோகன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலர்உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார். பிள்ளையானுக்கு அழைப்பெடுக்க முயற்சித்த ரணிலின்பாதுகாப்பு அதிகாரி KKSற்கு மாற்றப்பட்டார்!

ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். அதன்படி, விக்ரமசிங்கவின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய தலைமைப்காவற்துறைஅதிகாரி  அசோக ஆரியவன்ச, காங்கேசன்துறை காவல்  நிலையத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்திற்கு தேசிய காவற்துறை  ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைமை ஆய்வாளர் ஆரியவன்ச, விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார், இதில் 15 ஆண்டுகள்அவரது பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். காவற்துறையினரின் கூற்றுப்படி, ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) இடையிலானதொலைபேசி அழைப்பைப் பெற அந்த அதிகாரி முயற்சித்ததன் காரணமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி இந்த நோக்கத்திற்காக ஒரு சிஐடி அதிகாரியைத் தொடர்பு கொண்டதாக காவற்துறையினர்தெரிவித்துள்ளனர்.

தமிழர்களுக்குரிய கட்சி தமிழரசு கட்சி மாத்திரமே!

மக்கள்ஆதரவு வழங்க வேண்டும்-விடுக்கப்பட்ட கோரிக்கை..! மூதூர் பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக கிளிவெட்டி வட்டாரத்தில் போட்டியிடும்வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரக் கூட்டம் இன்றையதினம்(01) காலை இடம்பெற்றது. இதன்போது வீடுகள், வீதிகள் தோறும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.  இதன் பின்னர் வேட்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  எமது வட்டாரத்தில் வீதிப் பிரச்சினை,மின்குமிழ் பிரச்சினை,வடிகாண் பிரச்சினைகள் என பல்வேறுபிரச்சினைகள் தேங்கி காணப்படுகின்றன.இவற்றை நிவர்த்தி செம் எமது கிராம மக்களைஒன்றிணைத்து நாங்கள் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். தமிழர்களுக்குரிய கட்சி தமிழரசு கட்சி மாத்திரமே.இதனை வெற்றி அடையச் செய்ய அனைவரும்முன்வர வேண்டும் என தெரிவித்தார். 

மூதூர் கிராம மக்கள் முன்னெடுத்த மேதின நிகழ்வு..!

மூதூர் மல்லிகைத்தீவு கிராமத்தில் உலக தொழிலாளர் தின நிகழ்வு இன்று(01) காலை இடம்பெற்றது. இதன்போது தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் மூதூர்-மல்லிகைத்தீவில் உள்ள உலர்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. மூதூர் -மல்லிகைத்தீவு கிராம மக்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பிரதேச தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும்கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.