Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை - ஈரான்!

அஜர்பைஜானின் குற்றச்சாட்டை ஈரான் மறுக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் இன்று (09) தெரிவித்துள்ளது. மோதலின் ஆரம்பத்தில் ஈரான் பேச்சுவார்த்தையை நாடிய போதிலும் ஈரான் போரை ஆரம்பிக்கவில்லை என ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பக்ஹாயி தெரிவித்துள்ளார்.
11ஆவது நாளாக இராணுவ ஆக்கிரமிப்பைக் கொண்ட அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல் தொடர்கிறது. நாங்கள் இந்த போரை ஆரம்பிக்கவில்லை என செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெறுகிறது. பாதுகாப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச முடியாது. தற்போதைய நிலையில், ஈரான் தன்னைத் தானே பாதுகாக்கும் செயற்பாட்டில் உள்ளது. பிராந்திய பதற்ற நிலை எல்லைக் கடந்த சூழலில் அஜர்பைஜான், துருக்கி அல்லது சைப்ரஸ் மீது ஆளில்லா விமானம் அல்லது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் மேற்கொண்டுள்ளது.
நாங்கள், எந்த நாட்டின் மீதும் இராணுவ ஆக்கிரமிப்பை பிராந்தியத்தில் ஏற்படுத்தவில்லை. எங்கள் தரப்பிலிருந்து ஈரானுக்கு உள்ளேயோ அல்லது எங்கள் இராணுவ கட்டமைப்பிலிருந்தோ எவ்விதமான தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை. 

அஜர்பைஜானின் குற்றச்சாட்டை ஈரான் மறுக்கிறது. அஜர்பைஜான், ஈரானின் ஆளில்லா விமானங்கள் நக்சிவன் பகுதியிலுள்ள விமான நிலைய முனையத்தையும் பாடசாலை கட்டிடத்தையும் பல பொதுமக்களையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.