Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்ததொடர்பில் சிறப்பு விசாரணை!

.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) காமினி பி. திசாநாயக்க. தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக நிறுவன மட்டத்தில் நிலை 1 சிறைக் காவலரின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மேலதிக விசாரணைக்காக வீரவில சிறைச்சாலையின் உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில், அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்ட பின்னர் இந்தக் கைதி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த கைதி சிறையில் புதிய கைதிகளுக்கான விடுதியில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது இடையூறு விளைவிக்கும் நடத்தை காரணமாக, மருத்துவ ஆலோசனையின் பேரில் அவர் சிறைச்சாலை  வைத்தியசாலையிலுள்ள  ஒரு விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலை மருத்துவரிடம் ஒப்படைக்கப்பட்டு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அங்குணுகொலபெலஸ்ஸ ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த  போதே குறித்த கைதி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய, நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தடயவியல் மருத்துவர் வழங்கிய அறிக்கையின்படி, மரணத்திற்கான காரணம் தாக்குதல் எனக் கூறப்படுகிறது.