Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும். 29.01.2026 - யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவரை சந்தித்த அரசியல்வாதிகள் !

கத்தோலிக்க பாதிரியாரைத் தாக்கிய குற்றப் புலனாய்வு மோட்டார் சைக்கிள் குழு!

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவரை சந்தித்த அரசியல்வாதிகள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின்  ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவருக்கும் வேலணை பிரதேச சபை தவிசாளர்  சிவலிங்கம் அசோக்குமார் தலைமையிலான குழுவினருக்கும்இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (28) யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில்இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் இந்திய இழுவைப்படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும்பிரச்சனைகள்நயினாதீவில் தற்சமயம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்  சூரியகல மின் உற்பத்தி தொடர்பான விடையங்கள்அதனுடன் தொடர்புடைய அபிவிருத்திகள் மற்றும் வேலணை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும்கலந்துரையப்பட்டது.

இவ் கலந்துரையாடலில்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேலணை பிரதேச சபையின் தவிசாளர்  சிவலிங்கம் அசோக்குமார் வேலணை பிரதேச சபையின் உப தவிசாளர்  கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், வேலணை பிரதேச சபையின்  உறுப்பினர்கள் செல்லப்பா பார்த்தீபன்,மங்களேஸ்வரன் கார்த்தீபன்,  நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்திய துணைத் தூதரகஅதிகாரிகள் போன்றோர் கலந்துகொண்டனர்.

வெகு  விரைவில் மெலிஞ்சிமுனையில் ஆயுள் வேத நிலையம்.
பொது அமைப்புக்கள், கரம்பொன் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்குஅமைவாக  மெலிஞ்சிமுனையில் ஆயுள் வேத நிலையம் அமைக்கப்பட உள்ளதெ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர் புவி தெரிவித்துள்ளார்.
மேலும் இப் பிரதேசத்தில் ஆயுள் வேத நிலையத்தை அமைப்பதற்கு அதற்கான வேலைத்திட்டத்தினை இப் பிரதேசசமூக மட்ட அமைப்புக்கள் துரித கதியில் ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி ஆரம்பிக்கப்பட உள்ள ஆயுள் வேத நிலையத்தினை ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர் புவி  அவர்களும், கரம்பொன் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களும் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களுடன்நேரடியாக பார்வையிட்டதுடன்  ஊர்காவற்றுறை பிரதேச சபையின் மேற்பார்வையின் கீழும்,  இப்பிரதேச பொதுஅமைப்புக்களின்  பிரதிநிதிகளின் மேற்பார்வையின் கீழும் இயங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணி!
"இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியை பிரதேச செயலாளர் தவிசாளரிடம் கையளித்தார்"
 நீண்டகாலமாக (14 ஆண்டுகள்) இராணுவப் பயன்பாட்டிலிருந்து,  பண்டத்தரிப்பு இராணுவ முகாமின் கட்டளைஅதிகாரியால் தம்மிடம் கையளிக்கப்பட்ட  பிரதேச சபைக்குச் சொந்தமான முப்பத்தொரு பரப்புடைய காணியைமானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசிதன் அவர்களிடம்  சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள் ஆவண ரீதியாக கையளித்தார்.

ஏறாவூர், களுவாணி பகுதியில்  கடலுக்குச் சென்ற நபர்  காணாமல் போயுள்ளார்!
ஏறாவூர், களுவாணி பகுதியில் நேற்றைய தினம் (28) மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நபர்  படகு கவிழ்ந்ததில்  நீரில்மூழ்கி காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்  விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் களுவன்கேணி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காணாமல் போன நபரைக் கண்டுபிடிக்க ஏறாவூர் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கத்தோலிக்க பாதிரியாரைத் தாக்கிய  குற்றப் புலனாய்வு மோட்டார் சைக்கிள் குழு!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ்உத்தியோகத்தர்களும் இன்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில்விடுவிக்க கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது பணி இடைநீக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.