Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

காட்டு யானை தாக்கி ஹங்கேரி நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்!

காட்டு யானையுடன் மோதிய தபால் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது!

சீகிரியா - பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த 68 மதிக்கத்தக்க சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வெளிநாட்டுப் பயணி தனது மனைவியுடன் சீகிரியா, பிதுரங்கல வீதியில் பாதசாரியாகச் சென்று கொண்டிருந்த போதே, திடீரென அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காட்டு யானையுடன் மோதிய தபால் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது!

கொழும்பிலிருந்து  திருகோணமலை நோக்கிப் பயணித்த தபால் ரயிலொன்று இன்று (17) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானையுடன் மோதியதில் தடம் புரண்டுள்ளது. இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே காட்டு யானை உயிரிழந்துள்ளது. 

காட்டு யானையின் காலின் ஒரு பகுதி ரயிலின் இயந்திரத்தில் சிக்கியதனாலேயே ரயில் தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கவுடுல்ல வனப் பகுதியிலிருந்து சோமாவதி வனப்பகுதிக்கு தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோதே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.