Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது!

பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள்.

பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள். தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி சித்துப்பாத்தி மயானத்திலே அகழ்வாராய்ச்சி பணிகளின் போது இதுவரை 44 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 47 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பார்க்கும்போது தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது.

மயானத்திலே பிணங்கள் எரிக்கப்பட்டால் அதுதான் வெந்து கொண்டிருக்கும். ஆனால் எங்களுடைய தமிழினத்தின் அந்த எலும்புக்கூடுகளை இவர்கள் தோண்டி தோண்டி எடுக்கின்ற போது எங்களுடைய நெஞ்சம் வெந்து கொண்டிருக்கின்றது. அடிவயிறு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.

பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து புதைகுழி வளர்த்திருக்கிறார்கள். புதைத்திருக்கிறார்கள், சிதைத்திருக்கிறார்கள், அழித்திருக்கிறார்கள் இதையெல்லாம் பார்க்கும் போது நெஞ்சம் பதைப்படைக்கிறது.

எங்கள் இனத்தின் மீது கொண்ட  பகையின் காரணமாக இந்த அளவிற்கா? என்ன அநியாயம். செம்மணியில் தோண்டி எடுக்கப்பட்ட அந்த எலும்புக்கூடுகள் யார்? எண்ணி பார்க்கிறேன். சேயை கட்டி அணைத்த வண்ணம் தாயை கண்டெடுத்திருக்கிறார்கள். புத்தகப் பையை ஏந்தி பிடித்த சிறுவனை கொன்று குவித்திருக்கிறார்கள். உயிரோடு வைத்து புதைத்திருக்கிறார்களே நெஞ்சம் பதை பதைக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழினம் கொதித்து எழ வேண்டும். அங்கு தமது சொந்தங்களை, பந்தங்களை, உற்றாரை, உறவினரை இழந்து விட்டு இன்றுவரை அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? எறிந்தார்களா? புதைந்தார்களா? சிதைந்தார்களா? என்று தெரியாமல் நாதியற்று அலைந்து கொண்டிருக்கின்ற தமிழின உறவுகளின் உள்ளங்கள் எப்படி பாடுபட்டிருக்கும் எப்படி பதை பதைத்திருக்கும்.

இதை எல்லாம் பார்க்கின்ற போது சர்வதேச அளவிலே எமது மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதிக்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் தொப்புள் கொடி உறவுகளாக குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம் என தெரிவித்தார்.