Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்.நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மா!

மாமுனை கடல் பகுதிகளில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல்!

யாழ்.நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் 22 வயதுடைய நபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நாவந்துறை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது. 
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில், இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது. 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் மாமுனை கடல் பகுதிகளில் 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​முப்பத்து மூன்று (33)  கிலோகிராமை விட அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர். 
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலகேணி கடற்படை நிலையத்தால் மாமுனை கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​குறிப்பிட்ட கடல் பகுதிகளில் மிதந்து கொண்டிருந்த ஒரு (01) சந்தேகத்திற்கிடமான பையானது பரிசோதிக்கப்பட்டது, மேலும் பையில் பொதிச்செய்யப்பட்டிருந்த முப்பத்து மூன்று (33)  கிலோகிராமை விட அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு ஏழு (07) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறதுடன்,மேலும் கடற்படையின் நடவடிக்கைகளின் போது கரைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.