Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

வெற்றி என்பது எங்களுக்கு இலக்காக இருக்கவேண்டும். அந்த வெற்றியை உரிய தடத்தின் ஊடாகவே நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.

நாங்கள் நேர்வழியில் போராடி தோல்வியடையலாம். அது குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதைவிட சிறப்பானது.

விளையாடும்போது வெற்றி என்பது எங்களுக்கு இலக்காக இருக்கவேண்டும். அந்த வெற்றியை உரிய தடத்தின் ஊடாகவே நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். வெற்றியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக குறுக்குவழிகளை நாங்கள் நாடக்கூடாது. அது விளையாட்டின் பண்பல்ல. நாங்கள் நேர்வழியில் போராடி தோல்வியடையலாம். அது குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதைவிட சிறப்பானது. இவ்வாறு வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 

வடக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விளையாட்டு விழா ஓமந்தையிலுள்ள விளையாட்டுத் திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (03) அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் சிறப்பு விருந்தினராகவும், வவுனியா மாவட்டச் செயலர் பி.ஏ.சரத் சந்திர கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றனர். 

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், விளையாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து விருதுகளை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றினார். அவர் தனது உரையில்,

கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் விளையாட்டுக்கு வழங்கப்படுவது குறைவு. பெற்றோர்களும் இதற்கு ஒருவகையில் காரணம். கல்வியால் மாத்திரம் ஒருவரின் ஆளுமைகளை மேம்படுத்த முடியாது. ஏனைய துறைகளிலும் குறிப்பாக விளையாட்டுத்துறையில் பங்கேற்பதன் மூலம் எங்களை நாங்களே ஆளுமையுள்ளவர்களாக வடிவமைத்துக் கொள்ளலாம். 

விளையாட்டுத்துறையைப் பொருத்தவரையில் வடக்கு மாகாணம் இன்னமும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியிருக்கின்றது. விளையாட்டு வீரர்களை நாங்கள் இளமையிலிருந்தே அவர்களைப் பயிற்றுவிக்கவேண்டிய தேவையும் உள்ளது. மாகாணமட்டத்தில் சாதித்த வீர வீராங்கனைகள் தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளீர்கள். கடந்த காலங்களில் எமது மாகாணம் சுவீகரித்த பதக்கங்களை விட அதிகளவு பதக்கங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும், என்று குறிப்பிட்டார். 

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த வீர, வீராங்கனைகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.