ஜேவிபி 2/3 பெருன்பான்மையுடன் முழுமையாக அதிகாரத்திற்கு வந்து 5 மாதங்கள் முடிவடைகின்றது! இனவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாக கூச்சமில்லாமல் பொய் சொல்லுகின்றார்கள்.
தையிட்டி சட்டவிரோத விகாரை சூழலில் புதிய கட்டுமானமொன்றை அரச ஊழியலாரான உயர் பொலிஸ் அதிகாரி மூலம் திறந்து வைக்கின்றார்கள்

யாழ்ப்பாணத்தில் இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் 3,575.29 ஏக்கர் நிலப்பரப்பை மீள பெற்று கொடுப்பதாக வழங்கிய வாக்குறுதி தொடர்பாக எந்தவித முயற்சியுமில்லை
இதில் பொருளாதாரத்திற்கு கணிசமாக பங்களிக்க கூடிய வளமான 2,624.29 ஏக்கர் தனியார் காணிகளிருந்து பூர்விக மக்களை விரட்டி விட்டு இராணுவம் விவசாயம் முதல் வியாபாரம் வரை செய்வதை வேடிக்கை பார்க்கின்றார்கள்
இது போதாதென்று 72,348 ஏக்கர் நிலத்தை வன ஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது
இதில் 14,171 ஏக்கர் நிலம் மக்கள் ஏற்கனவே வாழ்ந்த நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது
அதே போல வன வள திணைக்களத்திடம் மட்டும் 5,000 ஏக்கர் நிலம் சிக்கி இருக்கின்றது
இதற்கிடையில் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து விட்டு அங்குள்ள வெறும் 2.5 KM வீதியை பயன்படுத்த சட்டவிரோதமாக நிபந்தனைகளை விதித்து அதனை மீறினால் சட்ட நடவடிக்கை என அச்சுறுத்துகின்றார்கள்
மறுபுறம் தையிட்டி சட்டவிரோத விகாரை சூழலில் புதிய கட்டுமானமொன்றை அரச ஊழியலாரான உயர் பொலிஸ் அதிகாரி மூலம் திறந்து வைக்கின்றார்கள்
இதற்கெதிராக போராடும் நில சொந்தக்காரர்களான பூர்விக குடி மக்களை பயங்கரவாத விசாரணை பிரிவு மூலம் அச்றுத்துகின்றார்கள்
நெடுந்தீவு முதல் மருதன்கேணி வரையில் கடற்தொழிலை நம்பி வாழும் 50,000 குடும்பங்களின் கோரிக்கைகளில் ஒன்றான இழுவை மடி வலைகளை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றார்கள்
விசேடமாக சட்டவிரோத சுருக்குவலை உட்பட்ட சட்டவிரோத தொழில்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்த புரிதலுமில்லை
இப்போதும் இந்திய மீனவர் ஆக்கிரமிப்புகளால் வாரத்திற்கு மூன்று நாட்கள் தொழிலுக்கு போக முடியாமல் அல்லல்படுகின்றார்கள்
மேய்ச்சலுக்காகவும்இ இருப்புக்காகவும்இ விருத்திக்காகவும் மீன்கள் வந்து நடமாடும் கடற்காணிகளை கடலட்டை பண்ணை என்கிற பெயரில் முறை தவறி வழங்கும் செயல்களும் அப்படியே தொடருகின்றன
யாழ்ப்பாணத்தின் ஒரே ஒரு மீன்பிடி துறைமுகமான மயிலிட்டி துறைமுகம் இப்போது கூட முழுமையாக தமிழ் மீனவர்களால் பயன்படுத்த முடியாமலிருக்கின்றது
குறிப்பாக யாழ்ப்பாண நகரை இலக்கு வைத்து இந்திய வர்த்தகர்கள் படையெடுக்கின்றார்கள்
அதே போல பருவகாலங்களில் தென்னிலங்கை வர்த்தகர்கள் ஆக்கிரமிக்கின்றார்கள்
இந்த நிலையில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை பாதுகாப்பதற்கான எந்த பொறிமுறைகளுமில்லை
ஆனையிறவு உப்பள விவகாரத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பை பெற்று கொடுக்க மறுத்து விட்டு பெயரில் விளையாடி கொண்டு இருக்கின்றார்கள்
பனை அபிவிருத்தி சபை இ திக்கம் வடிசாலைஇ வட கடல் நிறுவனம் உட்பட்ட நிறுவனங்களை வினைத்திறனாக இயக்குவது குறித்து வெறுமனே பேசி கொண்டிருக்கின்றார்கள்
கூட்டுறவு அமைப்புகள் இப்போதும் கூட கவனிப்பாரற்று முயற்சிகளுமின்றி முடங்கி போய் கிடக்கின்றன
உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்புகள், சந்தை கழிவு நெருக்கடிகள், உரிய காலத்தில் உரத்தை பெற்று கொடுத்தல் என்பனவெல்லாம் இன்னமும் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன
யாழ்ப்பாணத்தில் மட்டும் நிலவும் 1,503 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள், சுகாதார ஊழியர்கள் நெருக்கடிகள் என எதற்கும் தீர்ப்பதற்கான முயற்சிகளில்லை
சுகாதாரம் மற்றும் கல்வி கட்டமைப்புகள் எதிர்கொள்ளும் வள நெருக்கடிகளும் எந்த மாற்றமுமின்றி தொடருகின்றது
யாழ்ப்பாண மக்களுக்கான குடிநீர் பிரச்சினை அரசியலாகி இப்போதும் சிக்கி சீரழிகின்றது
இது தவிர பாதுகாப்பற்ற புகையிரத தடவைகள், வீதி விளக்குகள், வீதி சமிச்சை விளக்குகள் என ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் நெருக்கடிகளாகவே இருக்கின்றன
இது போதாதென்று யாழ்ப்பாணம் போதைவஸ்து கடத்தலின் கேந்திர நிலையமாகவே மாறி வாருகின்றது
இதன் பிண்ணனியில் கடற்படை அதிகாரிகள் இருப்பதால் ஆட்சியாளர்கள் மிக அமைதியாக இருக்கின்றார்கள்
மிக விசேடமாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் நெருக்கடி முழுமையாகவே மறக்கப்பட்டு விட்டது.
போர்வீரர்களை பாதுகாப்போம் என ஆட்சியாளர்கள் பேசுவதால் இந்த அவலங்களை பேசுவதெல்லாம் இனவாதம் என்கின்றார்கள்
ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வரும் திரு அனுரா குமார திசாநாயக்க உட்பட்ட ஜேவிபி தலைமைகள் இலங்கையராக ஒன்றிணைவோம் என்கின்றார்கள்
இதில் இனவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாக கூச்சமில்லாமல் பொய் சொல்லுகின்றார்கள்
இது போதாதென்று ஊழலை ஒழிப்போம் என தேவாரம் போல மீண்டும் மீண்டும் சொல்லுகின்றார்கள்
இங்கே வெறும் 5 மாத காலப்பகுதியில் நீண்டகால நெருக்கடிகளை தீர்த்து விட முடியாது என்கின்ற போதும் எந்த முயற்சிகளுமில்லை என்பது தான் சிக்கலாக இருக்கின்றது
இந்த நெருக்கடிகளுக்குள் யாழ்ப்பாணத்தில் ஜேவிபி பாராளமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் எந்த பொருளுமில்லாமல் தொடர்ந்தும் உளறுகின்றார்கள்
சகிக்க முடியவில்லை.