செக் வைத்த டிரம்ப்.. செக் மேட் செய்த சீனா! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!
இப்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடை லிஸ்ட்டில் உள்ள Scandium எனும் தனிமம் தொழில்நுட்ப துறையில் மிக முக்கியமானது.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்திருந்தாலும், சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிதான் பெரும் பஞ்சாயத்தாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 7 அரிய வகை தனிமங்களை ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.
விண்வெளி தொடங்கி சாதாரண மொபைல் போன் வரையிலும் இந்த தனிமங்களின் பயன்பாடுகள் இருக்கிறது. அப்படி இருக்கையில் சீனாவின் இந்த திடீர் அறிவிப்பு டெக் உலகையே உலுக்கி எடுத்துவிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சீன பொருட்களுக்கு அமெரிக்கா 54% வரியை விதித்திருக்கிறது. பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34% வரியை போட்டிருக்கிறது. இந்த வரியை வாபஸ் வாங்கவில்லை எனில் கூடுதலாக 50% என மொத்தம் 104% போடுவோம் பாத்துக்கோங்க என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கு பதிலடியாகத்தான் ரேர் எர்த் மெட்டல்கள் எனப்படும் 7 அரிய வகை தனிமங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
அரிய வகை தனிமங்கள் என்ன சீனாவில் மட்டும்தான் கிடைக்குமா? உலகின் வேறு எந்த பகுதியிலும் கிடைக்காதா? என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம். விஷயம் என்னவெனில், இந்த தனிமங்கள் பூமியிலிருந்து சுத்தமாக கிடைக்காது. சில கலவைகளோடுதான் கிடைக்கும். இதை நீக்கி சுத்தப்படுத்தி, தூய்மையாக மாற்றுவது பெரிய பிராசஸ். இதற்கான கட்டமைப்புகள் சீனாவிடம்தான் சிறப்பானதாக இருக்கிறது. எனவே உலக நாடுகள் சீனாவைத்தான் நம்பி இருக்கின்றன.
ரேடியோ ஃபிரீக்வென்சி மற்றும் ஸ்டோரேஜ் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தபடும் சிப்களில் அரிய வகை தனிமங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் இந்த கட்டுப்பாடுகளால் வேறு எந்த நாடுகளை காட்டிலும் அமெரிக்காதான் அதிகம் பாதிக்கப்படும். காரணம் இந்த தனிமங்களை அதிகம் நம்பியிருப்பது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள்தான்.
ரேடியோ ஃபிரீக்வென்சி மற்றும் ஸ்டோரேஜ் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தபடும் சிப்களில் அரிய வகை தனிமங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் இந்த கட்டுப்பாடுகளால் வேறு எந்த நாடுகளை காட்டிலும் அமெரிக்காதான் அதிகம் பாதிக்கப்படும். காரணம் இந்த தனிமங்களை அதிகம் நம்பியிருப்பது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள்தான்.
Broadcom ???????? அமெரிக்கா (USA)
Qualcomm ???????? அமெரிக்கா (USA)
TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) ???????? தைவான் (Taiwan)
Samsung ???????? தென் கொரியா (South Korea)
Seagate ???????? அமெரிக்கா (USA)
Western Digital ???????? அமெரிக்கா (USA)
இந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால் அது அமெரிக்க டெக் துறையையே உலுக்கி எடுத்துவிடும். ஆனால் இந்த கட்டுப்பாடுகளை சீனா இன்று திடீரென விதிக்கவில்லை. ஏற்கெனவே இரண்டு கட்ட கட்டுப்பாடுகளை போட்டிருக்கிறது. இது மூன்றாவது கட்டம். முதல் கட்டத்தில் - Antimony, Gallium, Germanium இரண்டாவது கட்டத்தில் - Tungsten, Indium, Molybdenum மூன்றாவது கட்டத்தில் - Scandium, Dysprosium மற்றும் மற்ற அரிய வகை தனிமங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடை லிஸ்ட்டில் உள்ள Scandium எனும் தனிமம் தொழில்நுட்ப துறையில் மிக முக்கியமானது. இதை வைத்துதான் ScAlN எனும் பைசோஎலெக்ட்ரிக் பொருளை தயாரிக்கின்றனர். அதாவது 5ஜி ஸ்மார்ட்போன், Wi-Fi 6 / Wi-Fi 7 ரவுட்டர்கள், செல்போன் டவர், IoT டிவைஸ்கள் (ஸ்மார்ட் வாட்ச்/ஏசி/டிவி/பிரிட்ஜ்/லைட், சிசிடிவி கேமரா) ஆகியவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமெரிக்காவுக்கு சரியான பதிலடிதான். ஆனால், இது இந்தியாவையும் சேர்த்து பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம். சீனா வைத்தது செக் மேட்டா இல்லையா என!