Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கச்சத்தீவு வழக்கு - இறுதி விசாரணைக்காக திகதியிட்ட இந்திய உச்சநீதிமன்றம்!

மனுதாரரான மறைந்த மு.கருணாநிதிக்குப் பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் திகதிக்கு வழக்கை பட்டியலிட இந்திய உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

மேலும், இந்த வழக்கில் மனுதாரரான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு பதிலாக திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலுவை சேர்க்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் வகையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

கச்சத்தீவை மீட்கக் கோரி அதிமுக பொதுச் செயலராக இருந்த மறைந்த ஜெயலலிதா, ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மனுதாரரான முன்னாள் முதல்வர் கருணாநிதி தரப்பில் மூத்த சட்டத்தரணி பி.வில்சன் ஆஜராகி, "கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க 1974, ஜூன் 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும், மார்ச் 23, 1976 அன்று செய்யப்பட்ட மற்றொரு ஒப்பந்தமும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மற்றும் இந்த ஒப்பந்தங்கள் கேள்விக்குரியவை' என்றார். 

மேலும், மனுதாரரான மறைந்த மு.கருணாநிதிக்குப் பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 15-ஆம் திகதிக்கு பட்டியலிட்டது.